• Oct 06 2024

சாய்ந்தமருதின் 1வது கதிரியல் புற்றுநோய் சிகிச்சையாளராக செரோன் அனாஸ்க்கு இளமானி பட்டம்...! samugammedia

Sharmi / Oct 7th 2023, 9:44 am
image

Advertisement

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக பொதுப்பட்டமளிப்பு விழாவானது கடந்த ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்கவின்  தலைமையில் நடைபெற்றது.

குறித்த பட்டமளிப்பு விழாவில் என்.கே.செரோன் அனாஸ் கதிரியல் புற்றுநோய் சிகிச்சையாளராக தனது இளமானி பட்டத்தை பெற்றார்.

குறிப்பாக இத்துறையில்  கிழக்கு மாகாணத்தில் இளம் வயதில் இளமானி பட்டத்தை நிறைவு செய்த  முதல் நபராகவும் மேலும்  சாய்ந்தமருதின் முதலாவது கதிரியல் புற்றுநோய் சிகிச்சையாராகவும் இளமானி பட்டத்தை நிறைவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாய்ந்தமருது நூறுல் ஜின்னா மற்றும் ஆமீனா உம்மா ஆகியோரின் புதல்வரான இவர் தனது ஆரம்பக் கல்வியை சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்திலும் உயர்தர கல்வியை உயிரியல் விஞ்ஞான பிரிவில் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையிலும் கற்று 2018 ஆம் ஆண்டு ஜேனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு தெரிவானார்.

தனது பல்கலைக்கழக நாட்களில் சர்வதேச மற்றும் தேசிய ரீதியில் பல விருதுகளை  வென்ற இவர், குறிப்பாக 2021ஆம் ஆண்டு அதி சிறந்த பல்கலைக்கழக மாணவருக்கான தேசிய  விருதையும் விருதையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.


சாய்ந்தமருதின் 1வது கதிரியல் புற்றுநோய் சிகிச்சையாளராக செரோன் அனாஸ்க்கு இளமானி பட்டம். samugammedia ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக பொதுப்பட்டமளிப்பு விழாவானது கடந்த ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்கவின்  தலைமையில் நடைபெற்றது. குறித்த பட்டமளிப்பு விழாவில் என்.கே.செரோன் அனாஸ் கதிரியல் புற்றுநோய் சிகிச்சையாளராக தனது இளமானி பட்டத்தை பெற்றார். குறிப்பாக இத்துறையில்  கிழக்கு மாகாணத்தில் இளம் வயதில் இளமானி பட்டத்தை நிறைவு செய்த  முதல் நபராகவும் மேலும்  சாய்ந்தமருதின் முதலாவது கதிரியல் புற்றுநோய் சிகிச்சையாராகவும் இளமானி பட்டத்தை நிறைவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சாய்ந்தமருது நூறுல் ஜின்னா மற்றும் ஆமீனா உம்மா ஆகியோரின் புதல்வரான இவர் தனது ஆரம்பக் கல்வியை சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்திலும் உயர்தர கல்வியை உயிரியல் விஞ்ஞான பிரிவில் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையிலும் கற்று 2018 ஆம் ஆண்டு ஜேனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு தெரிவானார். தனது பல்கலைக்கழக நாட்களில் சர்வதேச மற்றும் தேசிய ரீதியில் பல விருதுகளை  வென்ற இவர், குறிப்பாக 2021ஆம் ஆண்டு அதி சிறந்த பல்கலைக்கழக மாணவருக்கான தேசிய  விருதையும் விருதையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement