அரசாங்கத்தினால் குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரிசியின் தரம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளை அரசாங்கம் அறிந்துள்ளதா என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அமர்வின் போது விசேட கருத்தொன்றினை முன்வைத்து உரையாற்றும் போது மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.
அரசாங்கத்தினால் குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரிசியை உட்கொண்டு பாணகமுவ பகுதியில் ஏழு கோழிகள் உயிரிழந்துள்ளன.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படும் அரிசியின் தரம் தொடர்பில் கடந்த காலங்களில் பல கேள்விகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் பாணகமுவ பிரதேசத்தில் உள்ள ஒருவர் அரசாங்கத்தினால் கிடைக்கப் பெற்ற அரிசியை, தான் வளர்க்கும் கோழிகளுக்கு உணவாக வழங்கியுள்ளார்.
இதனை உட்கொண்ட 07 கோழிகள் உயிரிழந்துள்ளன.
இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் அறிந்துள்ளதா? எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியிருந்தார்.
அரசு வழங்கிய அரிசியை உட்கொண்ட 07 கோழிகள் சாவு. சபையில் கேள்வியெழுப்பிய முஜிபுர் ரஹ்மான் அரசாங்கத்தினால் குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரிசியின் தரம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளை அரசாங்கம் அறிந்துள்ளதா என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வியெழுப்பியுள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அமர்வின் போது விசேட கருத்தொன்றினை முன்வைத்து உரையாற்றும் போது மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார். அரசாங்கத்தினால் குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரிசியை உட்கொண்டு பாணகமுவ பகுதியில் ஏழு கோழிகள் உயிரிழந்துள்ளன.குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படும் அரிசியின் தரம் தொடர்பில் கடந்த காலங்களில் பல கேள்விகள் எழுந்துள்ளன.இந்நிலையில் பாணகமுவ பிரதேசத்தில் உள்ள ஒருவர் அரசாங்கத்தினால் கிடைக்கப் பெற்ற அரிசியை, தான் வளர்க்கும் கோழிகளுக்கு உணவாக வழங்கியுள்ளார்.இதனை உட்கொண்ட 07 கோழிகள் உயிரிழந்துள்ளன.இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் அறிந்துள்ளதா எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியிருந்தார்.