• Oct 22 2026

ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஏழு நாள் திட்டம்! அமெரிக்காவுக்கு ஈரான் விதித்த முக்கிய நிபந்தனை

Chithra / Oct 21st 2026, 11:05 am
image


அமெரிக்கா தமது நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு, வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கப்போவதில்லை என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.


ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) இதனைத் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலையில், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பான மறைமுகப் பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தான் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் ஊடாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.


ஈராக் நாட்டின்  தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் முழுமையாகத் திறப்பதற்கான ஏழு நாள் திட்டமொன்றை ஈரான் முன்வைத்துள்ளதாக அராக்சி குறிப்பிட்டுள்ளார்.


குறித்த திட்டத்தின் ஏழாவது நாளில் ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இந்தத் திட்டத்திற்கு அமெரிக்கா கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ள போதிலும், மேலும் சில ஏற்பாடுகளை அதில் இணைத்துக்கொள்ள வொஷிங்டன் விரும்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


எனினும், இஸ்லாமாபாத் குறிப்பாணையின் கீழ் அமெரிக்கா வழங்கியுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் முதலில் நிறைவேற்ற வேண்டும் என்பதே ஈரானின் பிரதான நிபந்தனையாக உள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.


அந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்ட நிலையிலேயே இருக்கும் எனவும் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இதேவேளை, செங்கடலில் நிலவும் பதற்றமான சூழ்நிலைகளுக்கும் ஈரானுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என அராக்சி மறுப்புத் தெரிவித்துள்ளார்.


சவுதி அரேபியாவுக்கும் யேமனின் ஹூதி அமைப்புக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஈரான் முன்வைத்த மத்தியஸ்த யோசனை இதுவரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன், யேமன் விவகாரத்தில் எகிப்து தலையிடுவது பிராந்திய நிலைமையை மேலும் சிக்கலாக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.


பொருளாதாரத் தடைகள் மற்றும் இராணுவ அச்சுறுத்தல்கள் மூலம் பிராந்தியத்தில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாது எனவும் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி மேலும் தெரிவித்துள்ளார்.


ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஏழு நாள் திட்டம் அமெரிக்காவுக்கு ஈரான் விதித்த முக்கிய நிபந்தனை அமெரிக்கா தமது நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு, வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கப்போவதில்லை என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) இதனைத் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலையில், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பான மறைமுகப் பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தான் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் ஊடாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.ஈராக் நாட்டின்  தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் முழுமையாகத் திறப்பதற்கான ஏழு நாள் திட்டமொன்றை ஈரான் முன்வைத்துள்ளதாக அராக்சி குறிப்பிட்டுள்ளார்.குறித்த திட்டத்தின் ஏழாவது நாளில் ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்தத் திட்டத்திற்கு அமெரிக்கா கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ள போதிலும், மேலும் சில ஏற்பாடுகளை அதில் இணைத்துக்கொள்ள வொஷிங்டன் விரும்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எனினும், இஸ்லாமாபாத் குறிப்பாணையின் கீழ் அமெரிக்கா வழங்கியுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் முதலில் நிறைவேற்ற வேண்டும் என்பதே ஈரானின் பிரதான நிபந்தனையாக உள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.அந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்ட நிலையிலேயே இருக்கும் எனவும் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதேவேளை, செங்கடலில் நிலவும் பதற்றமான சூழ்நிலைகளுக்கும் ஈரானுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என அராக்சி மறுப்புத் தெரிவித்துள்ளார்.சவுதி அரேபியாவுக்கும் யேமனின் ஹூதி அமைப்புக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஈரான் முன்வைத்த மத்தியஸ்த யோசனை இதுவரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், யேமன் விவகாரத்தில் எகிப்து தலையிடுவது பிராந்திய நிலைமையை மேலும் சிக்கலாக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.பொருளாதாரத் தடைகள் மற்றும் இராணுவ அச்சுறுத்தல்கள் மூலம் பிராந்தியத்தில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாது எனவும் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement