• Jul 05 2025

இலஞ்ச வழக்கில் குவாசி நீதிபதி உட்பட பலர் கைது!

Chithra / Jul 4th 2025, 1:13 pm
image

 

கதுருவெல குவாசி நீதிமன்ற நீதிபதி மற்றும் இலிகிதர் ஆகியோர் இன்று இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

விவாகரத்து வழக்கொன்றில் பெண்ணுக்கு சாதகமான தீர்ப்பை வழங்குவதற்காக ஒரு இலட்சம் இலஞ்சம் கோரப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணைக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் அலுவலக வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டடுள்ளதுடன் சந்தேக நபர்கள் கதுருவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.


இந்நிலையில் பேராதனை பூச்சிக்கொல்லிகள் பதிவாளர் அலுவலகத்தின் அபிவிருத்தி அதிகாரி மற்றும் சாரதியொருவர் இலஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

பூச்சிக்கொல்லிகள், பூஞ்சைக் கொல்லிகள் மற்றும் தாவர வளர்ச்சி ஹார்மோன்கள் தயாரிக்கும் தொழிலைப் பதிவு செய்வதற்கும் உற்பத்தி செய்யப்படும் பூச்சிக்கொல்லிகளின் மாதிரிகளை எடுப்பதற்கும் அதிகாரிகள் வந்த வாகனத்திற்கு எரிபொருள் வாங்குவதற்காக முறைப்பாட்டாளரிடமிருந்து 10,000 ரூபா கோரிய குற்றச்சாட்டின் பேரில் இரண்டு சந்தேக நபர்களும் முறைப்பாட்டாளரின் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 


இலஞ்ச வழக்கில் குவாசி நீதிபதி உட்பட பலர் கைது  கதுருவெல குவாசி நீதிமன்ற நீதிபதி மற்றும் இலிகிதர் ஆகியோர் இன்று இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.விவாகரத்து வழக்கொன்றில் பெண்ணுக்கு சாதகமான தீர்ப்பை வழங்குவதற்காக ஒரு இலட்சம் இலஞ்சம் கோரப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணைக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட இருவரும் அலுவலக வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டடுள்ளதுடன் சந்தேக நபர்கள் கதுருவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.இந்நிலையில் பேராதனை பூச்சிக்கொல்லிகள் பதிவாளர் அலுவலகத்தின் அபிவிருத்தி அதிகாரி மற்றும் சாரதியொருவர் இலஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.பூச்சிக்கொல்லிகள், பூஞ்சைக் கொல்லிகள் மற்றும் தாவர வளர்ச்சி ஹார்மோன்கள் தயாரிக்கும் தொழிலைப் பதிவு செய்வதற்கும் உற்பத்தி செய்யப்படும் பூச்சிக்கொல்லிகளின் மாதிரிகளை எடுப்பதற்கும் அதிகாரிகள் வந்த வாகனத்திற்கு எரிபொருள் வாங்குவதற்காக முறைப்பாட்டாளரிடமிருந்து 10,000 ரூபா கோரிய குற்றச்சாட்டின் பேரில் இரண்டு சந்தேக நபர்களும் முறைப்பாட்டாளரின் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement