• May 17 2024

நாட்டின் சிறைச்சாலைகளில் கடும் இடநெருக்கடி- தொற்றுநோய்கள் பரவும் அபாயம்..!samugammedia

mathuri / Jan 16th 2024, 6:31 am
image

Advertisement

அண்மைக்கால புள்ளி விபரங்களின் படி, நாடெங்கிலும் உள்ள சிறைச்சாலைகளில் கடும் இடநெருக்கடியும் வசதிக்குறைவும் ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக தொற்றுநோய்கள் கடுமையாக பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாகவும்   தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போதைக்கு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை 232 வீதத்தினால் சடுதியாக அதிகரித்துள்ளது.

பல்வேறு வழக்குகளில் பிணை வழங்கப்பட்டுள்ள போதும் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் சுமார் 1795 கைதிகள் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே , நாடெங்கும் உள்ள 27 சிறைச்சாலைகளில் 187 மலசலகூடங்களின் பற்றாக்குறை காணப்படுவதுடன், 287 மலசலகூடங்களை திருத்தியமைக்க வேண்டியிருப்பதாகவும் சிறைச்சாலைகள் தொடர்பான புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கடந்த 2011ம் ஆண்டு தொடக்கம், 2021ம் வரையான ஆண்டுகளில் சிறைச்சாலைகளில் ஏற்பட்ட கைதிகளின் கலவரங்கள் காரணமாக சேதமுற்றுள்ள சில சிறைச்சாலைகளின் கட்டிடங்களும்  இதுவரை காலமும் திருத்தியமைக்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில் அரசாங்கம் வருடமொன்றுக்கு 800 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையொன்றை சிறைச்சாலைகளின் பராமரிப்புக்காக ஒதுக்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

நாட்டின் சிறைச்சாலைகளில் கடும் இடநெருக்கடி- தொற்றுநோய்கள் பரவும் அபாயம்.samugammedia அண்மைக்கால புள்ளி விபரங்களின் படி, நாடெங்கிலும் உள்ள சிறைச்சாலைகளில் கடும் இடநெருக்கடியும் வசதிக்குறைவும் ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக தொற்றுநோய்கள் கடுமையாக பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாகவும்   தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை 232 வீதத்தினால் சடுதியாக அதிகரித்துள்ளது.பல்வேறு வழக்குகளில் பிணை வழங்கப்பட்டுள்ள போதும் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் சுமார் 1795 கைதிகள் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே , நாடெங்கும் உள்ள 27 சிறைச்சாலைகளில் 187 மலசலகூடங்களின் பற்றாக்குறை காணப்படுவதுடன், 287 மலசலகூடங்களை திருத்தியமைக்க வேண்டியிருப்பதாகவும் சிறைச்சாலைகள் தொடர்பான புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை, கடந்த 2011ம் ஆண்டு தொடக்கம், 2021ம் வரையான ஆண்டுகளில் சிறைச்சாலைகளில் ஏற்பட்ட கைதிகளின் கலவரங்கள் காரணமாக சேதமுற்றுள்ள சில சிறைச்சாலைகளின் கட்டிடங்களும்  இதுவரை காலமும் திருத்தியமைக்கப்படவில்லை.இவ்வாறான நிலையில் அரசாங்கம் வருடமொன்றுக்கு 800 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையொன்றை சிறைச்சாலைகளின் பராமரிப்புக்காக ஒதுக்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement