• Sep 14 2025

அறுவை சிகிச்சைக்கு இடையே உடலுறவு; மருத்துவ நிபுணரின் செயலால் அதிர்ச்சி!

shanuja / Sep 13th 2025, 8:16 pm
image


அறுவை சிகிச்சைக்கு இடையே தாதியருடன் உடலுறவில் ஈடுபட்ட மருத்துவர் ஒருவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மயக்க மருந்து நிபுணரான மருத்துவர் சுஹைல் அஞ்சும் என்பவரே இவ்வாறான செயலில் ஈடுபட்டுள்ளார். 


இங்கிலாந்தில்  கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள டேம்சைட் பொது மருத்துவமனையில் ஒன்றில் அறுவை சிகிச்சை செய்துகொண்டிருந்துள்ளார். 


அதன்போது அறுவை சிகிச்சையை நடுவில் விட்டுவிட்டு ஒரு தாதியர்  உடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். 

 

கையும் களவுமான பிடிபட்ட மருத்துவர்  தனது பேண்ட்டை கழற்றி இருந்த நிலையில், அங்கிருந்த  தாதி  உள்ளாடைகளுடன் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 


அப்போது இவர்கள் இருவரும் மற்றொரு தாதியரால் பிடிபட்டதாக லண்டனை தளமாகக் கொண்ட டேப்லாய்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


தாதியுடன் உடலுறவு கொள்வதற்காக, பித்தப்பையை அகற்றும் அறுவை சிகிச்சைக்கு இடையிலேயே நோயாளியை அப்படியே விட்டுவிட்டு  மருத்துவர் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 


பாத்ரூம் செல்வதாக மயக்க மருந்து  தாதியரிடம் கூறிவிட்டு, மற்றொரு தாதியருடன் அவர் உடலுறவில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.  


மருத்துவர் அஞ்சும் தாதியுடன்  தியேட்டருக்கு அருகில் உள்ள மற்றொரு அறையில் உடலுறவு கொண்டிருந்தபோது, அங்கு அடுத்த  அறுவை சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்களை  எடுக்கச் சென்ற மற்றொரு தாதியர்  பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். 


இதனையடுத்து அவர் இது தொடர்பில் முறைப்பாடு அளித்த பின்னரே இந்தச் சம்பவம் வெளிவந்துள்ளது.

அறுவை சிகிச்சைக்கு இடையே உடலுறவு; மருத்துவ நிபுணரின் செயலால் அதிர்ச்சி அறுவை சிகிச்சைக்கு இடையே தாதியருடன் உடலுறவில் ஈடுபட்ட மருத்துவர் ஒருவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மயக்க மருந்து நிபுணரான மருத்துவர் சுஹைல் அஞ்சும் என்பவரே இவ்வாறான செயலில் ஈடுபட்டுள்ளார். இங்கிலாந்தில்  கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள டேம்சைட் பொது மருத்துவமனையில் ஒன்றில் அறுவை சிகிச்சை செய்துகொண்டிருந்துள்ளார். அதன்போது அறுவை சிகிச்சையை நடுவில் விட்டுவிட்டு ஒரு தாதியர்  உடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்.  கையும் களவுமான பிடிபட்ட மருத்துவர்  தனது பேண்ட்டை கழற்றி இருந்த நிலையில், அங்கிருந்த  தாதி  உள்ளாடைகளுடன் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அப்போது இவர்கள் இருவரும் மற்றொரு தாதியரால் பிடிபட்டதாக லண்டனை தளமாகக் கொண்ட டேப்லாய்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.தாதியுடன் உடலுறவு கொள்வதற்காக, பித்தப்பையை அகற்றும் அறுவை சிகிச்சைக்கு இடையிலேயே நோயாளியை அப்படியே விட்டுவிட்டு  மருத்துவர் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பாத்ரூம் செல்வதாக மயக்க மருந்து  தாதியரிடம் கூறிவிட்டு, மற்றொரு தாதியருடன் அவர் உடலுறவில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.  மருத்துவர் அஞ்சும் தாதியுடன்  தியேட்டருக்கு அருகில் உள்ள மற்றொரு அறையில் உடலுறவு கொண்டிருந்தபோது, அங்கு அடுத்த  அறுவை சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்களை  எடுக்கச் சென்ற மற்றொரு தாதியர்  பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து அவர் இது தொடர்பில் முறைப்பாடு அளித்த பின்னரே இந்தச் சம்பவம் வெளிவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement