அச்சுவேலி செல்வநாயகபுரம் பகுதியில் இருந்து கூரிய ஆயுதங்கள் விசேட அதிரடிப்படையரால் மீட்கப்பட்டுள்ளன.
பற்றை ஒன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இன்று மதியம் குறித்த வாள்கள் மீட்கப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட நான்கு வாள்களும் மோட்டார் சைக்கிள் வேகத்தை கட்டுப்படுத்த பயன்படும் டிஸ்பிறேக் சக்கரத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் விசேட அதிரடிப்படையினரால்அச்சுவேலி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. குறித்த விடயம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அச்சுவேலியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கூரிய ஆயுதங்கள் மீட்பு samugammedia அச்சுவேலி செல்வநாயகபுரம் பகுதியில் இருந்து கூரிய ஆயுதங்கள் விசேட அதிரடிப்படையரால் மீட்கப்பட்டுள்ளன.பற்றை ஒன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இன்று மதியம் குறித்த வாள்கள் மீட்கப்பட்டுள்ளன.கைப்பற்றப்பட்ட நான்கு வாள்களும் மோட்டார் சைக்கிள் வேகத்தை கட்டுப்படுத்த பயன்படும் டிஸ்பிறேக் சக்கரத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன.கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் விசேட அதிரடிப்படையினரால்அச்சுவேலி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. குறித்த விடயம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.