கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை இலங்கையில் குறைவடைந்த நிலையில் பதிவாகியிருந்த நிலையில் இன்றையதினம்(01) தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதன்படி இன்றைய தினத்திற்கான தங்க நிலவரத்தின் அடிப்படையில்,
24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,980 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 191,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,990 அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 175,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.