• Sep 19 2024

திரையுலகில் அடுத்தடுத்து அதிர்ச்சி.. பிரபல நடிகை திடீர் மரணம்... சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்..!SamugamMedia

Sharmi / Feb 22nd 2023, 2:08 pm
image

Advertisement

கடந்த சில வாரங்களாக பல்வேறு பட்ட திரையுலக முக்கியஸ்தர்கள் உயிரிழந்துவரும் நிலையில் இன்று மலையாள திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகை சுபி சுரேஷ் உயிரிழந்துள்ளமை திரையுலகத்தினரை பெரும் கவலையடையச் செய்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மலையாள திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் சுபி சுரேஷ். இவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று அதன் பின்னரே மிகவும் பிரபலம் ஆனவர்.


மேலும் காமெடி கலந்து இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் விதம் அனைவருக்கும் பிடித்துப்போனதால் இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உருவானது.

அந்தவகையில் சுபி சுரேஷ் சின்னத்திரையில் முதல் முதலில் தொகுத்து வழங்கியது 'சினிமாலா' என்கிற நிகழ்ச்சி தான். ஏசியாநெட் சேனலில் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சி மூலமே அவர் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார்.


அந்தவகையில் கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த இவர் கடந்த சில தினங்களாக கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

42 வயதான சுபி சுரேஷ் திடீரென மரணம் அடைந்து இருப்பது திரையுலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.




திரையுலகில் அடுத்தடுத்து அதிர்ச்சி. பிரபல நடிகை திடீர் மரணம். சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்.SamugamMedia கடந்த சில வாரங்களாக பல்வேறு பட்ட திரையுலக முக்கியஸ்தர்கள் உயிரிழந்துவரும் நிலையில் இன்று மலையாள திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகை சுபி சுரேஷ் உயிரிழந்துள்ளமை திரையுலகத்தினரை பெரும் கவலையடையச் செய்துள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,மலையாள திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் சுபி சுரேஷ். இவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று அதன் பின்னரே மிகவும் பிரபலம் ஆனவர். மேலும் காமெடி கலந்து இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் விதம் அனைவருக்கும் பிடித்துப்போனதால் இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உருவானது.அந்தவகையில் சுபி சுரேஷ் சின்னத்திரையில் முதல் முதலில் தொகுத்து வழங்கியது 'சினிமாலா' என்கிற நிகழ்ச்சி தான். ஏசியாநெட் சேனலில் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சி மூலமே அவர் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார். அந்தவகையில் கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த இவர் கடந்த சில தினங்களாக கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 42 வயதான சுபி சுரேஷ் திடீரென மரணம் அடைந்து இருப்பது திரையுலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement