• Nov 26 2024

7 கோடி ரூபா கொள்ளையர்கள் தொடர்பில் வௌியான திடுக்கிடும் தகவல்கள்!

Tamil nila / Nov 23rd 2024, 10:38 pm
image

மினுவாங்கொடை பகுதியில் ஏழரை கோடி ரூபா கொள்ளையடிக்கப்பட்ட பிரதான சந்தேகநபர்கள் இருவர் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட மேலும் இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் 18ஆம் திகதி, மினுவாங்கொடையில் உள்ள தனியார் வங்கியின் சாரதி ஒருவர், வங்கிக்கு பணத்தை எடுத்துச் செல்லும் போது, ​​7 கோடி ரூபாவுக்கும் அதிக பணத்துடன் தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த பணத்தில் 3 கோடிக்கும் அதிகமான பணத்தை பொலிஸார் கண்டுபிடித்தனர். மேலும் சந்தேகத்தின் பேரில் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

கம்பஹா பிரிவு குற்றத் தடுப்பு பிரிவினர் இது தொடர்பான பல முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

பிரதான சந்தேக நபர் கட்டானை பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதான துஷார இந்திக சொய்சா எனவும், மற்றைய சந்தேக நபர் 40 வயதான உடுகம்பலை பிரதேசத்தை சேர்ந்த சமன் ரணசிங்க எனவும் தெரியவந்துள்ளது.

கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்ட போது சந்தேகநபர்கள் இருவரும் மூன்றரை கோடி ரூபாவை வேறு ஒருவரிடம் கொடுத்துள்ளதுடன், குறித்த நபர் பணத்துடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்ட பின்னர் இருவரும் குருநாகல் மசாஜ் நிலையம் ஒன்றிற்கு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல CCTV காட்சிகளை சோதனை செய்ததில் இந்த தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு, பொலிஸார் நடத்திய விசாரணையில் இருவரும் அங்கிருந்து வாடகை காரில் நாகதீபத்திற்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், குருநாகல், கணேவத்த பிரதேசத்தில் சந்தேகநபர்கள் இருவரும் வீதியில் காத்திருந்த ஒருவரிடமிருந்து தமக்கு அழைப்பு வரவிருப்பதாக தெரிவித்து கையடக்க தொலைபேசி ஒன்றை 10,000 ரூபாவுக்கு கொள்வனவு செய்துள்ளனர்.இது தொடர்பான CCTV காட்சிகளும் ஊடகங்களில் வெளியாகின.

பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் நாகதீப கோவிலுக்குச் சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டவிட்டு, யாழ்ப்பாணம் நகருக்குத் திரும்பியதும் கடற்படைச் சிப்பாய்கள் குழுவுடன் உரையாடிய போதிலும் அவர்களால் அடையாளம் காண முடியவில்லை.

பின்னர், சந்தேகநபர்கள் இருவரும் ஒரு இலட்சத்து 50,000 ரூபாவை வாடகை வாகனத்திற்கு செலுத்தியுள்ளனர்.

பின்னர், சம்பந்தப்பட்ட காரின் சாரதிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு சந்தேகநபர்கள் இருவரைப் பற்றி கேட்டபோது, ​​அவர் முன்னுக்குப் பின் முரணான பதில்களை அளித்துள்ளார்.

பின்னர், சம்பந்தப்பட்ட சாரதி மற்றும் உதவியாளரை கைது செய்து விசாரணை நடத்தியதில் சந்தேகத்திற்கு இடமான இருவரையும் பொலிஸார் தேடுவதாக தெரிவித்ததையடுத்து அவர்கள் தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் இருவரும் தப்பிச் செல்லும் CCTV காட்சியும் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது.

சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் ஊடாக இந்தியாவுக்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அதன்படி, அதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

7 கோடி ரூபா கொள்ளையர்கள் தொடர்பில் வௌியான திடுக்கிடும் தகவல்கள் மினுவாங்கொடை பகுதியில் ஏழரை கோடி ரூபா கொள்ளையடிக்கப்பட்ட பிரதான சந்தேகநபர்கள் இருவர் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட மேலும் இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த நவம்பர் 18ஆம் திகதி, மினுவாங்கொடையில் உள்ள தனியார் வங்கியின் சாரதி ஒருவர், வங்கிக்கு பணத்தை எடுத்துச் செல்லும் போது, ​​7 கோடி ரூபாவுக்கும் அதிக பணத்துடன் தப்பிச் சென்றுள்ளார்.குறித்த பணத்தில் 3 கோடிக்கும் அதிகமான பணத்தை பொலிஸார் கண்டுபிடித்தனர். மேலும் சந்தேகத்தின் பேரில் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.கம்பஹா பிரிவு குற்றத் தடுப்பு பிரிவினர் இது தொடர்பான பல முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.பிரதான சந்தேக நபர் கட்டானை பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதான துஷார இந்திக சொய்சா எனவும், மற்றைய சந்தேக நபர் 40 வயதான உடுகம்பலை பிரதேசத்தை சேர்ந்த சமன் ரணசிங்க எனவும் தெரியவந்துள்ளது.கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்ட போது சந்தேகநபர்கள் இருவரும் மூன்றரை கோடி ரூபாவை வேறு ஒருவரிடம் கொடுத்துள்ளதுடன், குறித்த நபர் பணத்துடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்ட பின்னர் இருவரும் குருநாகல் மசாஜ் நிலையம் ஒன்றிற்கு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பல CCTV காட்சிகளை சோதனை செய்ததில் இந்த தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு, பொலிஸார் நடத்திய விசாரணையில் இருவரும் அங்கிருந்து வாடகை காரில் நாகதீபத்திற்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.இதற்கிடையில், குருநாகல், கணேவத்த பிரதேசத்தில் சந்தேகநபர்கள் இருவரும் வீதியில் காத்திருந்த ஒருவரிடமிருந்து தமக்கு அழைப்பு வரவிருப்பதாக தெரிவித்து கையடக்க தொலைபேசி ஒன்றை 10,000 ரூபாவுக்கு கொள்வனவு செய்துள்ளனர்.இது தொடர்பான CCTV காட்சிகளும் ஊடகங்களில் வெளியாகின.பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் நாகதீப கோவிலுக்குச் சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டவிட்டு, யாழ்ப்பாணம் நகருக்குத் திரும்பியதும் கடற்படைச் சிப்பாய்கள் குழுவுடன் உரையாடிய போதிலும் அவர்களால் அடையாளம் காண முடியவில்லை.பின்னர், சந்தேகநபர்கள் இருவரும் ஒரு இலட்சத்து 50,000 ரூபாவை வாடகை வாகனத்திற்கு செலுத்தியுள்ளனர்.பின்னர், சம்பந்தப்பட்ட காரின் சாரதிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு சந்தேகநபர்கள் இருவரைப் பற்றி கேட்டபோது, ​​அவர் முன்னுக்குப் பின் முரணான பதில்களை அளித்துள்ளார்.பின்னர், சம்பந்தப்பட்ட சாரதி மற்றும் உதவியாளரை கைது செய்து விசாரணை நடத்தியதில் சந்தேகத்திற்கு இடமான இருவரையும் பொலிஸார் தேடுவதாக தெரிவித்ததையடுத்து அவர்கள் தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது.சந்தேகநபர்கள் இருவரும் தப்பிச் செல்லும் CCTV காட்சியும் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது.சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் ஊடாக இந்தியாவுக்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.அதன்படி, அதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement