• May 02 2024

தேசிய வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

Chithra / Apr 16th 2024, 2:03 pm
image

Advertisement

  

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு வழங்கப்படும் கணிசமான அளவு உலர் உணவுகள் தரம் குறைந்ததாகவும் சரியான தரமற்றதாகவும் இருப்பதாக பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார்.

நோயாளிகள் மட்டுமின்றி ஊழியர்களுக்கும் வழங்கப்படும் உணவு தரமற்றது எனத் தெரிவித்துள்ளார்.

தரப்படும் உணவு தரம் குறைந்ததாகவும், பூஞ்சை உடையதாகவும் உள்ளதாகவும், வழங்கப்படும் மீன் பரா மீனாக இருக்க வேண்டும் என்றாலும், 

சம்பந்தப்பட்ட நிறுவனம் அந்த வகைக்கு ஒத்தான மீன்களையே மருத்துவமனைக்கு வழங்குவதாகவும் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

இந்த உணவை வழங்கும் ஒப்பந்த நிறுவனம் சிறைச்சாலைகள், இராணுவ முகாம்கள் போன்ற அரச நிறுவனங்களுக்கு உலர் உணவுகளை வழங்குவதாகவும், 

இது தொடர்பில் உரிய திணைக்களங்களுக்கு பல தடவைகள் அறிவித்த போதும் எவ்வித பலனும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறித்த நிறுவனத்திற்கு உலர் உணவுக்காக மாதாந்தம் 76 மில்லியனும் மீனுக்காக 15 மில்லியனும் வழங்கப்படும் என பிரதிப் பணிப்பாளர் ருக்ஷான் பெல்லான மேலும் தெரிவித்தார்.

தேசிய வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு தொடர்பில் அதிர்ச்சி தகவல்   கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு வழங்கப்படும் கணிசமான அளவு உலர் உணவுகள் தரம் குறைந்ததாகவும் சரியான தரமற்றதாகவும் இருப்பதாக பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார்.நோயாளிகள் மட்டுமின்றி ஊழியர்களுக்கும் வழங்கப்படும் உணவு தரமற்றது எனத் தெரிவித்துள்ளார்.தரப்படும் உணவு தரம் குறைந்ததாகவும், பூஞ்சை உடையதாகவும் உள்ளதாகவும், வழங்கப்படும் மீன் பரா மீனாக இருக்க வேண்டும் என்றாலும், சம்பந்தப்பட்ட நிறுவனம் அந்த வகைக்கு ஒத்தான மீன்களையே மருத்துவமனைக்கு வழங்குவதாகவும் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார்.இந்த உணவை வழங்கும் ஒப்பந்த நிறுவனம் சிறைச்சாலைகள், இராணுவ முகாம்கள் போன்ற அரச நிறுவனங்களுக்கு உலர் உணவுகளை வழங்குவதாகவும், இது தொடர்பில் உரிய திணைக்களங்களுக்கு பல தடவைகள் அறிவித்த போதும் எவ்வித பலனும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.குறித்த நிறுவனத்திற்கு உலர் உணவுக்காக மாதாந்தம் 76 மில்லியனும் மீனுக்காக 15 மில்லியனும் வழங்கப்படும் என பிரதிப் பணிப்பாளர் ருக்ஷான் பெல்லான மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement