• May 17 2024

நாட்டிலுள்ள ஆயுர்வேத வைத்தியர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்! samugammedia

Chithra / Nov 26th 2023, 6:04 pm
image

Advertisement

 


நாட்டில் பதிவு செய்யப்படாத 18,516 ஆயுர்வேத வைத்தியர்கள் இருப்பதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆயுர்வேத வைத்தியர்கள் 05 வருடங்களுக்கு ஒருமுறை தமது பதிவை புதுப்பித்துக் கொள்ள வேண்டியிருந்தாலும், சம்பந்தப்பட்ட வைத்தியர்கள் தமது பதிவை புதுப்பிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை பதிவு செய்யப்பட்ட 26,650 பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவர்களில் 3,827 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டாலும், சரியான தகவல்கள் புதுப்பிக்கப்படவில்லை.

இதன் காரணமாக உயிரிழந்த வைத்தியர்களின் பதிவுச் சான்றிதழ்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கணக்காய்வாளர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, நாட்டிலுள்ள 452 லங்கா சதொச விற்பனை நிலையங்களில் 193 விற்பனை நிலையங்கள் நஷ்டம் அடைவதாக தெரியவந்துள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் லங்கா சதொச நிறுவனத்திற்கு ஏற்பட்ட இழப்பு 288 மில்லியன் ரூபா என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், இந்த வருடத்தின் கடந்த 10 மாதங்களில் ஸ்ரீலங்கா சதொச இலாபம் ஈட்டியுள்ளதாக அதன் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.


நாட்டிலுள்ள ஆயுர்வேத வைத்தியர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் samugammedia  நாட்டில் பதிவு செய்யப்படாத 18,516 ஆயுர்வேத வைத்தியர்கள் இருப்பதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.ஆயுர்வேத வைத்தியர்கள் 05 வருடங்களுக்கு ஒருமுறை தமது பதிவை புதுப்பித்துக் கொள்ள வேண்டியிருந்தாலும், சம்பந்தப்பட்ட வைத்தியர்கள் தமது பதிவை புதுப்பிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை பதிவு செய்யப்பட்ட 26,650 பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவர்களில் 3,827 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டாலும், சரியான தகவல்கள் புதுப்பிக்கப்படவில்லை.இதன் காரணமாக உயிரிழந்த வைத்தியர்களின் பதிவுச் சான்றிதழ்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கணக்காய்வாளர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.இதேவேளை, நாட்டிலுள்ள 452 லங்கா சதொச விற்பனை நிலையங்களில் 193 விற்பனை நிலையங்கள் நஷ்டம் அடைவதாக தெரியவந்துள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டில் லங்கா சதொச நிறுவனத்திற்கு ஏற்பட்ட இழப்பு 288 மில்லியன் ரூபா என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.எவ்வாறாயினும், இந்த வருடத்தின் கடந்த 10 மாதங்களில் ஸ்ரீலங்கா சதொச இலாபம் ஈட்டியுள்ளதாக அதன் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement