• Mar 19 2025

கிராண்ட்பாஸில் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்!

Chithra / Mar 18th 2025, 7:01 am
image


கிராண்ட்பாஸ் - நாகலகம் வீதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

நேற்று  இரவு இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை இந்த வருடத்தின் இதுவரை 25 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

அதில் 16 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டவை என காவல்துறை தெரிவித்துள்ளது. 

இந்த 25 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களினால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். 

அத்துடன் பலர் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.


கிராண்ட்பாஸில் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம் கிராண்ட்பாஸ் - நாகலகம் வீதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று  இரவு இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.இதேவேளை இந்த வருடத்தின் இதுவரை 25 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதில் 16 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டவை என காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த 25 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களினால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பலர் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement