• Dec 27 2024

தம்பதியினர் மீது துப்பாக்கிச் சூடு; கணவன் உயிரிழப்பு!

Chithra / Dec 25th 2024, 9:39 am
image


குருநாகல், வெல்லவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மரலுவாவ பகுதியில் வீடொன்றில் தம்பதியினர் மீது இனந்தெரியாத ஒருவர் நேற்று (24) இரவு துப்பாக்கி சூட்டை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த தம்பதியினர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கணவன் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மரலுவாவ பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த 30 வயதுடைய பெண் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பிலான தகவல் இதுவரை வெளியாகவில்லை.  

சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வெல்லவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


தம்பதியினர் மீது துப்பாக்கிச் சூடு; கணவன் உயிரிழப்பு குருநாகல், வெல்லவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மரலுவாவ பகுதியில் வீடொன்றில் தம்பதியினர் மீது இனந்தெரியாத ஒருவர் நேற்று (24) இரவு துப்பாக்கி சூட்டை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த தம்பதியினர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கணவன் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.மரலுவாவ பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.காயமடைந்த 30 வயதுடைய பெண் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.மேலும், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பிலான தகவல் இதுவரை வெளியாகவில்லை.  சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வெல்லவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement