• Apr 30 2025

இலங்கையில் தொடரும் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி! இளைஞன் காயம்

Chithra / Apr 29th 2025, 7:52 am
image


பாணந்துறையில் உள்ள ஹிரணை பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார்.

மேற்கு மாலமுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நடைபெற்ற விருந்து ஒன்றின் போது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர், மேற்கு மாலமுல்ல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

20 வயதான நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் T-56 வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக முதல்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஹிரணை பொலிஸார் சந்தேக நபர்களைக் கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும், சம்பவத்தின் பின்னணி மற்றும் தாக்குதலின் நோக்கம் குறித்து விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

 

இலங்கையில் தொடரும் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி இளைஞன் காயம் பாணந்துறையில் உள்ள ஹிரணை பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார்.மேற்கு மாலமுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நடைபெற்ற விருந்து ஒன்றின் போது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர், மேற்கு மாலமுல்ல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.20 வயதான நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் T-56 வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக முதல்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.ஹிரணை பொலிஸார் சந்தேக நபர்களைக் கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.மேலும், சம்பவத்தின் பின்னணி மற்றும் தாக்குதலின் நோக்கம் குறித்து விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. 

Advertisement

Advertisement

Advertisement