• May 29 2025

அதிகளவு அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு அபராதம்..!

Sharmi / May 26th 2025, 5:15 pm
image

ஏறாவூரில் கடை ஒன்றில் விற்பனைக்கு வைக்கப்பட்ட உப்பினை பொது சுகாதர பரிசோதகர்கள் கைப்பற்றி பகுப்பாய்வுக்கு அனுப்பியதில் அதிகளவான அயடீன் கலந்துள்ளமை கண்டுபிடித்ததையடுத்து கடை உரிமையாரை 10 ஆயிரம் ரூபா அபதாரம் செலுத்துமாறு இன்று(26) ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டு வைற் சோல்ட் இலச்சனையிடப்பட்ட பொதி செய்யப்பட்ட உப்பை  நாடு முழுவதும் தடை செய்ததுடன் இதனை கைப்பற்றி அழிக்குமாறும் தயாரிக்கும் இடத்தை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கட்டளை பிறப்பித்துள்ளார்.  

கடந்த மாதம் ஏறாவூர் பிரதேசத்தில் கடை ஒன்றில் விற்பனைக்கு வைக்கப்பட்ட பொதி செய்யப்பட்ட வைற் சோல்ட் என்ற இலச்சனை பதித்த உப்பு பைக்கற்றை சித்தாண்டி பொது சுகாதார பரிசோதகர்  கைப்பற்றி அதனை பகுப்பாய்வு திணைக்களத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பிவைத்தார்.

இந்த நிலையில் ஒரு கிலோ உப்பில் 30 கிராம் அயடீன் இருக்க வேண்டும். ஆனால் குறித்த உப்பில் 84 கிராம் அயடீன் கலந்துள்ளதாகவும் இது மனித பாவனைக்கு உகந்தது அல்ல என பகுப்பாய்வு திணைக்களம் அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து குறித்த உப்பை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்ததையடுத்து இன்று திங்கட்கிழமை நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொண்ட போது  குறித்த உப்பு  பையில் பெறிக்கப்பட்ட உற்பத்தி செய்யும் இடம் மற்றும் ஏனைய இரத தரவுகள் போலியானது எனவும் ஏறாவூரில் சட்ட விரோதமாக பொதி செய்யப்பட்டு பல பெயர்கள் கொண்ட இலச்சனையுடன் விற்பனை செய்யப்படுவதாக நீதிமன்றிற்கு பொது சுகாதார பரிசோதகர் சுட்டிக்காட்டினர்

இதனையடுத்து நீதவான் குறித்த கடை உரிமையாளரை 10 ஆயிரம் ரூபா அபராதமாக செலுத்துமாறு உத்தரவிட்டு வைற் சோல்ட் பெயர் பொறிக்கப்பட்டு பொதி செய்யப்பட்ட உப்பு பைக்கற்றை  நாடு முழுவதும் தடை செய்ததுடன் அதனை கண்டுபிடித்து அழிக்குமாறும் குறித்த உப்பு தயாரிக்கப்படும்  இடத்தை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்களுக்கு  நீதவான்  கட்டளை பிறப்பித்துள்ளார்.  


அதிகளவு அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு அபராதம். ஏறாவூரில் கடை ஒன்றில் விற்பனைக்கு வைக்கப்பட்ட உப்பினை பொது சுகாதர பரிசோதகர்கள் கைப்பற்றி பகுப்பாய்வுக்கு அனுப்பியதில் அதிகளவான அயடீன் கலந்துள்ளமை கண்டுபிடித்ததையடுத்து கடை உரிமையாரை 10 ஆயிரம் ரூபா அபதாரம் செலுத்துமாறு இன்று(26) ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டு வைற் சோல்ட் இலச்சனையிடப்பட்ட பொதி செய்யப்பட்ட உப்பை  நாடு முழுவதும் தடை செய்ததுடன் இதனை கைப்பற்றி அழிக்குமாறும் தயாரிக்கும் இடத்தை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கட்டளை பிறப்பித்துள்ளார்.  கடந்த மாதம் ஏறாவூர் பிரதேசத்தில் கடை ஒன்றில் விற்பனைக்கு வைக்கப்பட்ட பொதி செய்யப்பட்ட வைற் சோல்ட் என்ற இலச்சனை பதித்த உப்பு பைக்கற்றை சித்தாண்டி பொது சுகாதார பரிசோதகர்  கைப்பற்றி அதனை பகுப்பாய்வு திணைக்களத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பிவைத்தார்.இந்த நிலையில் ஒரு கிலோ உப்பில் 30 கிராம் அயடீன் இருக்க வேண்டும். ஆனால் குறித்த உப்பில் 84 கிராம் அயடீன் கலந்துள்ளதாகவும் இது மனித பாவனைக்கு உகந்தது அல்ல என பகுப்பாய்வு திணைக்களம் அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்தனர்.இதனை தொடர்ந்து குறித்த உப்பை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்ததையடுத்து இன்று திங்கட்கிழமை நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொண்ட போது  குறித்த உப்பு  பையில் பெறிக்கப்பட்ட உற்பத்தி செய்யும் இடம் மற்றும் ஏனைய இரத தரவுகள் போலியானது எனவும் ஏறாவூரில் சட்ட விரோதமாக பொதி செய்யப்பட்டு பல பெயர்கள் கொண்ட இலச்சனையுடன் விற்பனை செய்யப்படுவதாக நீதிமன்றிற்கு பொது சுகாதார பரிசோதகர் சுட்டிக்காட்டினர்இதனையடுத்து நீதவான் குறித்த கடை உரிமையாளரை 10 ஆயிரம் ரூபா அபராதமாக செலுத்துமாறு உத்தரவிட்டு வைற் சோல்ட் பெயர் பொறிக்கப்பட்டு பொதி செய்யப்பட்ட உப்பு பைக்கற்றை  நாடு முழுவதும் தடை செய்ததுடன் அதனை கண்டுபிடித்து அழிக்குமாறும் குறித்த உப்பு தயாரிக்கப்படும்  இடத்தை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்களுக்கு  நீதவான்  கட்டளை பிறப்பித்துள்ளார்.  

Advertisement

Advertisement

Advertisement