• Nov 28 2024

யாழ்.பல்கலைக்கழக ஊடக மாணவர்களின் குறுந் திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன

Anaath / Oct 10th 2024, 4:04 pm
image

யாழ்.பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட குறுந் திரைப்படங்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (11) பிற்பகல் 2 மணிக்கு பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கத்தில் திரையிடப்படவுள்ளன.

’.போரில் தன் உறவுகளை இழந்து அவர்தம் நினைவுகளோடு பயணித்துக் கொண்டிருக்கும் உறவொன்றின்பதிவான‘ஆதித்தா’. மலையக மக்களின் பேசப்படாத பிரச்சினை பற்றிப் பேசும் ‘ஆசனம்.

கருவறைக்குள் இருக்கும் குழந்தையைக் கூட விட்டுவைக்காத போரின் ரணங்களை நினைவூட்டுவதாக ‘மீண்டும் கருவறைக்குள்’.

ஒவ்வொருவரின் பார்வைக் கோணத்திற்கு ஏற்றாற் போலவே ஒவ்வொரு கதையும் வடிவமைக்கப்படுகின்றது.

‘காட்சிப்பிழை’, கடற்தொழிலுக்குச் சென்ற தன் துணைவனை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு பெண்ணின் கதையான ‘அலை’. 

தோல்வியடைந்த புகைப்படவியலாளன் ஒருவனின் வாழ்க்கை பற்றிப் பேசும் ‘ப்ரீஸ்’ .

குடும்ப வன்முறைகளினால் பாதிக்கப்படும் பிள்ளைகள் பற்றி பேசும் ‘ஏக்கம்’.

பாட்டிக்கும் பேரனுக்கும் இடையிலான அன்புறவினை வெளிப்படுத்தும் ‘மெய்மை’.

சுமைகள் நிறைந்த குடும்பப்பெண் ஒருவரின் நிராசைக் கனவுகள் பற்றிப் பதிவுசெய்யும் ‘மெய்ப்பட’.

ஒரு விடயத்தில் எவ்வளவு ஆர்வம் இருப்பினும் அதனையும் கடந்து சிறந்த திட்டமிடலும், நேர முகாமைத்துவமும் அவசியம் என்பதைப் பதிவு செய்யும் ‘வேட்கை’ ஆகிய குறுந்திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.

இக்குறுந்திரைப்பட விழாவானது ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களின் எண்மியக் கதை சொல்லல் கற்றலின் பெறுதியாக அமைவதும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொன்விழா நிகழ்வுகளின் ஒர் அங்கமாக மேற்கொள்ளப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

யாழ்.பல்கலைக்கழக ஊடக மாணவர்களின் குறுந் திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன யாழ்.பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட குறுந் திரைப்படங்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (11) பிற்பகல் 2 மணிக்கு பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கத்தில் திரையிடப்படவுள்ளன.’.போரில் தன் உறவுகளை இழந்து அவர்தம் நினைவுகளோடு பயணித்துக் கொண்டிருக்கும் உறவொன்றின்பதிவான‘ஆதித்தா’. மலையக மக்களின் பேசப்படாத பிரச்சினை பற்றிப் பேசும் ‘ஆசனம்.கருவறைக்குள் இருக்கும் குழந்தையைக் கூட விட்டுவைக்காத போரின் ரணங்களை நினைவூட்டுவதாக ‘மீண்டும் கருவறைக்குள்’.ஒவ்வொருவரின் பார்வைக் கோணத்திற்கு ஏற்றாற் போலவே ஒவ்வொரு கதையும் வடிவமைக்கப்படுகின்றது.‘காட்சிப்பிழை’, கடற்தொழிலுக்குச் சென்ற தன் துணைவனை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு பெண்ணின் கதையான ‘அலை’. தோல்வியடைந்த புகைப்படவியலாளன் ஒருவனின் வாழ்க்கை பற்றிப் பேசும் ‘ப்ரீஸ்’ .குடும்ப வன்முறைகளினால் பாதிக்கப்படும் பிள்ளைகள் பற்றி பேசும் ‘ஏக்கம்’.பாட்டிக்கும் பேரனுக்கும் இடையிலான அன்புறவினை வெளிப்படுத்தும் ‘மெய்மை’.சுமைகள் நிறைந்த குடும்பப்பெண் ஒருவரின் நிராசைக் கனவுகள் பற்றிப் பதிவுசெய்யும் ‘மெய்ப்பட’.ஒரு விடயத்தில் எவ்வளவு ஆர்வம் இருப்பினும் அதனையும் கடந்து சிறந்த திட்டமிடலும், நேர முகாமைத்துவமும் அவசியம் என்பதைப் பதிவு செய்யும் ‘வேட்கை’ ஆகிய குறுந்திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.இக்குறுந்திரைப்பட விழாவானது ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களின் எண்மியக் கதை சொல்லல் கற்றலின் பெறுதியாக அமைவதும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொன்விழா நிகழ்வுகளின் ஒர் அங்கமாக மேற்கொள்ளப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement