• Oct 02 2025

பாடசாலையில் சிரமதானப் பணி; மாணவர்கள் 40 பேர் வைத்தியசாலையில்!

shanuja / Sep 30th 2025, 4:23 pm
image

பொலன்னறுவை மெதிரிகிரிய மண்டலகிரிய தேசியப் பாடசாலையில் 40 க்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.



குறித்த பாடசாலையில் இன்று (30) காலை,  சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது. சிரமதானத்தில் மாணவர்களுக்கு திடீர் உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டது. பலருக்கு அரிப்பு உள்ளிட்ட அறிகுறிகள் தோன்றின.


 

அதனையடுத்து அவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.


தற்போது ஐந்து மாணவர்கள் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், மற்றவர்கள் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர்.


 இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகள்  முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத்  தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலையில் சிரமதானப் பணி; மாணவர்கள் 40 பேர் வைத்தியசாலையில் பொலன்னறுவை மெதிரிகிரிய மண்டலகிரிய தேசியப் பாடசாலையில் 40 க்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.குறித்த பாடசாலையில் இன்று (30) காலை,  சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது. சிரமதானத்தில் மாணவர்களுக்கு திடீர் உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டது. பலருக்கு அரிப்பு உள்ளிட்ட அறிகுறிகள் தோன்றின. அதனையடுத்து அவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.தற்போது ஐந்து மாணவர்கள் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், மற்றவர்கள் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகள்  முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத்  தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement