• Jan 26 2025

சீகிரியாவை இரவில் பார்வையிட முடியாது! வந்தது அறிக்கை

Chithra / Jan 15th 2025, 1:19 pm
image


வரலாற்று சிறப்புமிக்க சீகிரியா இரவில் சுற்றுலாப் பயணிகளுக்குத் திறக்கப்படும் என்ற செய்திகளை புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மறுத்துள்ளது. 

சீகிரியா கோட்டையை இரவில் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த அமைச்சு தெரிவித்துள்ளது 

இரவு நேர சுற்றுலாவுக்காக கோட்டை விளக்குகளால் ஒளிரச் செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் கூற்றுகளுக்கு பதிலளிக்கும் வகையில், அத்தகைய முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சு தெளிவுபடுத்தியது.

தற்போது சமூக ஊடகங்களில் பரவி வரும் இரவில் ஒளிரும் சீகிரியாவின் படமும் போலியானது என்று புத்தசாசன அமைச்சு கூறுகிறது.

 

 

சீகிரியாவை இரவில் பார்வையிட முடியாது வந்தது அறிக்கை வரலாற்று சிறப்புமிக்க சீகிரியா இரவில் சுற்றுலாப் பயணிகளுக்குத் திறக்கப்படும் என்ற செய்திகளை புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மறுத்துள்ளது. சீகிரியா கோட்டையை இரவில் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த அமைச்சு தெரிவித்துள்ளது இரவு நேர சுற்றுலாவுக்காக கோட்டை விளக்குகளால் ஒளிரச் செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் கூற்றுகளுக்கு பதிலளிக்கும் வகையில், அத்தகைய முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சு தெளிவுபடுத்தியது.தற்போது சமூக ஊடகங்களில் பரவி வரும் இரவில் ஒளிரும் சீகிரியாவின் படமும் போலியானது என்று புத்தசாசன அமைச்சு கூறுகிறது.  

Advertisement

Advertisement

Advertisement