• Jan 14 2025

திருகோணமலையில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி கையெழுத்து போராட்டம்!

Tharmini / Jan 13th 2025, 2:34 pm
image

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறும் அரசிடம் கோரிக்கை வைத்து, வடக்கு கிழக்கு தழுவிய ரீரியில் கையெழுத்துக்களைச் சேகரிக்கும் போரட்டமானதன் தொடர்ச்சியாக இன்று (13) திருகோணமலையில் கையல்யெழுத்து சேகரிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை சிவன் கோவிலடியில் குறித்த நிகழ்வானது முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மேலும், நீண்ட காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும், மற்றும் புனர்வாழ்வழிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டு பின்னரும் , நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட பின்பும் மீளவும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளை விடுதலை செய்யக் கோரியும் இந்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராளிகள் நலன்புரிச் சங்கத்தினால் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தழுவிய ரீதியில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 




 


திருகோணமலையில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி கையெழுத்து போராட்டம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறும் அரசிடம் கோரிக்கை வைத்து, வடக்கு கிழக்கு தழுவிய ரீரியில் கையெழுத்துக்களைச் சேகரிக்கும் போரட்டமானதன் தொடர்ச்சியாக இன்று (13) திருகோணமலையில் கையல்யெழுத்து சேகரிக்கப்பட்டுள்ளது.திருகோணமலை சிவன் கோவிலடியில் குறித்த நிகழ்வானது முன்னெடுக்கப்பட்டிருந்தது.மேலும், நீண்ட காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும், மற்றும் புனர்வாழ்வழிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டு பின்னரும் , நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட பின்பும் மீளவும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளை விடுதலை செய்யக் கோரியும் இந்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.போராளிகள் நலன்புரிச் சங்கத்தினால் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தழுவிய ரீதியில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   

Advertisement

Advertisement

Advertisement