• May 19 2024

சூடானில் இராணுவம் பொதுமக்கள் அமைப்புகள் இடையே உடன்படிக்கை கையெழுத்து!

Sharmi / Dec 5th 2022, 8:11 pm
image

Advertisement

சூடானில் வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வரும் நோக்குடன் அந்நாட்டு இராணுவ மற்றும் பொதுமக்கள் தலைவர்கள் இன்றைய தினம் (05) 'ஆரம்ப' உடன்படிக்கையொன்றில் கையெழுத்திட்டுள்ளனர்.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவியிலிருந்து ஒமர் அல் பஷீர் அகற்றப்பட்ட பின்னர், அரசியல் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்திருந்த நிலையில், 2021 ஒக்டோபரில் இராணுவத் தளபதி அப்தெல் ஃபத்தாஹ் அல் புர்ஹான் ஆட்சியைக் கைப்பற்றினார். 

அதையடுத்து, ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றதுடன், ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்கு அரச படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். இதனால் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய உடன்படிக்கையில் ஜனாதிபதியான ஜெனரல் அப்தெல் ஃபத்தா புர்ஹான், உப ஜனாதிபதி ஜெனரல்  மொஹம்மத் ஹம்தான் டகாலோ மற்றும் சுதந்திரம் மற்றும் மாற்றத்துக்கான படை உட்பட பல்வேறு சிவில் அமப்புகளின் தலைவர்களும் கையெழுத்திட்டனர்.  

சூடான் சட்டத்தரணிகள் சங்கத்தினால் முன்மொழியப்பட்ட உடன்படிக்கை யோசனைகள் தொடர்பில் ஐ.நா, மேற்குலக ராஜதந்திரிகள், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் முதலியவற்றின் பிரதிநிதிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

ஐ.நாவின் விசேட பிரதிநிதி வோல்கர் பேர்தெஸ், ஆபிரிக்க ஒன்றியத்தின் தூதுவர் மொஹம்மத் பேலைஸ் ஆகியோருடன் ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

சூடானில் இராணுவம் பொதுமக்கள் அமைப்புகள் இடையே உடன்படிக்கை கையெழுத்து சூடானில் வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வரும் நோக்குடன் அந்நாட்டு இராணுவ மற்றும் பொதுமக்கள் தலைவர்கள் இன்றைய தினம் (05) 'ஆரம்ப' உடன்படிக்கையொன்றில் கையெழுத்திட்டுள்ளனர்.2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவியிலிருந்து ஒமர் அல் பஷீர் அகற்றப்பட்ட பின்னர், அரசியல் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்திருந்த நிலையில், 2021 ஒக்டோபரில் இராணுவத் தளபதி அப்தெல் ஃபத்தாஹ் அல் புர்ஹான் ஆட்சியைக் கைப்பற்றினார். அதையடுத்து, ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றதுடன், ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்கு அரச படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். இதனால் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்றைய உடன்படிக்கையில் ஜனாதிபதியான ஜெனரல் அப்தெல் ஃபத்தா புர்ஹான், உப ஜனாதிபதி ஜெனரல்  மொஹம்மத் ஹம்தான் டகாலோ மற்றும் சுதந்திரம் மற்றும் மாற்றத்துக்கான படை உட்பட பல்வேறு சிவில் அமப்புகளின் தலைவர்களும் கையெழுத்திட்டனர்.  சூடான் சட்டத்தரணிகள் சங்கத்தினால் முன்மொழியப்பட்ட உடன்படிக்கை யோசனைகள் தொடர்பில் ஐ.நா, மேற்குலக ராஜதந்திரிகள், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் முதலியவற்றின் பிரதிநிதிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.ஐ.நாவின் விசேட பிரதிநிதி வோல்கர் பேர்தெஸ், ஆபிரிக்க ஒன்றியத்தின் தூதுவர் மொஹம்மத் பேலைஸ் ஆகியோருடன் ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement