வடக்கு மாகாண ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான சித்திரப் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் மாணவி வெள்ளிப்பதக்கத்தை பெற்றுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலையில் இன்று இடம்பெற்ற சித்திரப் போட்டியில், தரம் 2 மாணவர்களுக்கான ஒட்டுச் சித்திரப் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவி த.தக்ஷயா வெள்ளிப்பதக்கம் பெற்றுக்கொண்டார்.
மாகாணமட்ட சித்திரப் போட்டியில் தரம் 1 தொடக்கம் 5 வரை தலா மூன்று மாணவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் என பதக்கங்கள் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.
இதில் தரம் 2 சித்திரப்போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்ற மூன்று மாணவர்களில் தக்ஷயாவும் ஒருவராக தெரிவாகி தனது திறமையை வெளிப்படுத்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மாகாணமட்ட சித்திரப் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனாவுக்கு வெள்ளிப்பதக்கம்.samugammedia வடக்கு மாகாண ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான சித்திரப் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் மாணவி வெள்ளிப்பதக்கத்தை பெற்றுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலையில் இன்று இடம்பெற்ற சித்திரப் போட்டியில், தரம் 2 மாணவர்களுக்கான ஒட்டுச் சித்திரப் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவி த.தக்ஷயா வெள்ளிப்பதக்கம் பெற்றுக்கொண்டார்.மாகாணமட்ட சித்திரப் போட்டியில் தரம் 1 தொடக்கம் 5 வரை தலா மூன்று மாணவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் என பதக்கங்கள் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். இதில் தரம் 2 சித்திரப்போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்ற மூன்று மாணவர்களில் தக்ஷயாவும் ஒருவராக தெரிவாகி தனது திறமையை வெளிப்படுத்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.