• Apr 26 2024

முகப்பரு தொல்லைகளுக்கு எளிய வைத்திய முறைகள்! samugammedia

Tamil nila / Apr 8th 2023, 5:11 pm
image

Advertisement

பருக்களால் அவதிபடுபவர்கள் துளசி இலையை அரைத்து பேஸ்ட் செய்து பருக்களின் மீது வைத்து உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் மூன்று முறை செய்து வந்தால் நல்ல பயன் கிடைக்கும். துளசியை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்நீரை டோனர் போன்று பயன்படுத்தலாம்.

யோகா உடல் ஆரோக்கியத்தை மட்டும் மேம்படுத்துவதோடு, பல சரும பிரச்சனைகளையும் குணப்படுத்த உதவும். அதற்கு, வாயில் காற்றை நிரப்பி சிறிது நேரம் கழித்து மெதுவாக காற்றை வெளிவிட வேண்டும். இப்படி தினமும் 10 – 12 நிமிடம் செய்து வந்தால், நல்ல மாற்றத்தை காணலாம்.

மஞ்சள் மற்றும் இஞ்சியை சரிசமமாக எடுத்துக் கொண்டு அரைத்து பேஸ்ட் செய்து, இரவில் படுக்கும் போது பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். இப்படி ஒரு 3 நாள்கள் தொடர்ந்து செய்து வந்தால், விரைவில் குணமாகும்.



பலரும் குளிர்ந்த நீரில் தான் முகத்தை கழுவுவோம். ஆனால் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவினால், சருமத்தில் எண்ணெய் பசையின் சுரப்பு அதிகரித்து, அதனால் பருக்கள் வரும். எனவே வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.

உணவில் கசப்பான உனவு பொருட்களை சேர்ப்பதால் அவை இரத்தத்தை சுத்தம் செய்வதோடு, சருமத்தில் எண்ணெய் சுரப்பையும் கட்டுப்படுத்தும். எனவே கசப்பான உணவுப் பொருட்களான பாகற்காயை வாரம் ஒருமுறை உணவில் சேர்ப்பதோடு, தினமும் சிறிது வேப்பிலையை உட்கொள்வது பருக்கள் வருவதைத் தடுத்துவிடுவதோடு, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

தக்காளியை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றை தினமும் இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி வந்தால், முகம் பருக்களின்றி பொலிவோடு இருக்கும்.

சந்தனப் பொடியை, வேப்பிலை, தண்ணீர் சேர்த்து கலந்து முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்தால், சருமத்தில் உள்ள எந்த ஒரு பிரச்சினையும் நீங்கி, சருமம் பிரகாசமாகவும், சுத்தமாகவும் இருக்கும்.

முகப்பரு தொல்லைகளுக்கு எளிய வைத்திய முறைகள் samugammedia பருக்களால் அவதிபடுபவர்கள் துளசி இலையை அரைத்து பேஸ்ட் செய்து பருக்களின் மீது வைத்து உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் மூன்று முறை செய்து வந்தால் நல்ல பயன் கிடைக்கும். துளசியை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்நீரை டோனர் போன்று பயன்படுத்தலாம்.யோகா உடல் ஆரோக்கியத்தை மட்டும் மேம்படுத்துவதோடு, பல சரும பிரச்சனைகளையும் குணப்படுத்த உதவும். அதற்கு, வாயில் காற்றை நிரப்பி சிறிது நேரம் கழித்து மெதுவாக காற்றை வெளிவிட வேண்டும். இப்படி தினமும் 10 – 12 நிமிடம் செய்து வந்தால், நல்ல மாற்றத்தை காணலாம்.மஞ்சள் மற்றும் இஞ்சியை சரிசமமாக எடுத்துக் கொண்டு அரைத்து பேஸ்ட் செய்து, இரவில் படுக்கும் போது பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். இப்படி ஒரு 3 நாள்கள் தொடர்ந்து செய்து வந்தால், விரைவில் குணமாகும்.பலரும் குளிர்ந்த நீரில் தான் முகத்தை கழுவுவோம். ஆனால் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவினால், சருமத்தில் எண்ணெய் பசையின் சுரப்பு அதிகரித்து, அதனால் பருக்கள் வரும். எனவே வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.உணவில் கசப்பான உனவு பொருட்களை சேர்ப்பதால் அவை இரத்தத்தை சுத்தம் செய்வதோடு, சருமத்தில் எண்ணெய் சுரப்பையும் கட்டுப்படுத்தும். எனவே கசப்பான உணவுப் பொருட்களான பாகற்காயை வாரம் ஒருமுறை உணவில் சேர்ப்பதோடு, தினமும் சிறிது வேப்பிலையை உட்கொள்வது பருக்கள் வருவதைத் தடுத்துவிடுவதோடு, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.தக்காளியை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றை தினமும் இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி வந்தால், முகம் பருக்களின்றி பொலிவோடு இருக்கும்.சந்தனப் பொடியை, வேப்பிலை, தண்ணீர் சேர்த்து கலந்து முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்தால், சருமத்தில் உள்ள எந்த ஒரு பிரச்சினையும் நீங்கி, சருமம் பிரகாசமாகவும், சுத்தமாகவும் இருக்கும்.

Advertisement

Advertisement

Advertisement