• May 19 2024

ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்த பின் வடகிழக்கில் நிலங்கள் அபகரிக்கப்பட்டுவருகின்றது -நிசாந்தன் சுட்டிக்காட்டு! samugammedia

Tamil nila / Apr 12th 2023, 5:58 pm
image

Advertisement

ரணில் விக்கிரமசிங்கா ஆட்சிக்கு வந்த பின் வடகிழக்கில்  நிலங்கள் அபகரிக்கப்பட்டுவருகின்றது என தமிழ்த் தேசியக் கட்சி தேசிய அமைப்பாளர் நிசாந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். 

இன்றையதினம்  (12.04.2023 புதன்கிழமை) யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்ததார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

தேர்தல் ஆணைக்குழுவால் தேர்தல் அறிவிக்கப்பட்டு ஜனாதிபதியால் காலதாமதம் செய்யப்பட்டுள்ளது. ஜனநாயகம் என்று கூறிவிட்டு ஜனநாயகத் தன்மையற்ற நடவடிக்கைகளையே மேற்காண்டு வருகின்றனர்.

ரணில் விக்கிரமசி்ங்கா தன்னுடைய கட்சியையும் தன்னுடைய எதிர்காலத்தையும் நோக்காகக் கொண்டு ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதற்கான வழிவகைகளை மேற்கொள்கி்ன்றார்.

பெரமுன கட்சியானது மக்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர்கள் ரணில்  விக்கிரமசிங்காவை பொதுவேட்பாளாக  தேர்தலில் நிறுத்தி தமது கட்சியை பலப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

பயங்கரவாதத் தடை சட்டம் தமிழர்களுக்காக உருவாக்கப்பட்டு காலப்போக்கில் ராஜபக்சாக்களின் ஆட்சிக்காலத்தில் சிங்களவர்கள் மீதும் பாய்ந்தது. தற்போது அந்தச் சட்டத்திற்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் உருவாக்கப்படவுள்ளது. 

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிராக கட்சிகள் மற்றும் வெளிநாட்டுத் தூதரகங்களின் அழுத்தத்தால் தற்சமயம் அச் சட்ட மூலத்தை ஒத்திவைத்துள்ளால்கள்.  இந்த நாட்டில் ஒரு ஆர்ப்பாட்டத்தைக் கூட முன்னெடுக்க முடியாதளவிற்கு மிக மோசமானது.

ரணில் விக்கிரமசிங்கா ஆட்சிக்கு வந்த பின் வடகிழக்கில் பல்வேறு நிலங்கள் அபகரிக்கப்பட்டுவருகின்றது. அந்தவகையில் இலங்கையிலுள்ள தீவுகள் அனைத்தும் வெளிநாட்டுக்கு விற்கப்படும் நடவடிக்கை காணப்படுகின்றது.

மகாவலி அபிவிருத்தி சபை மூலம் மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்களோ அதைப் போல் தீவக அதிகார சபையை உருவாக்கி தீவுகளை வெளிநாட்டுக்கு விற்கப்படும் நிலை காணப்படுகின்றது. 

வடமாகாணத்திலே பிரபலமான தீவுகள் காணப்படுகின்றன. தற்பொழுது அத் தீவுகள் மாகாண சபை மற்றும் மாவட்ட அதிகார சபைகளுக்குட்பட்டே காணப்படுகின்றன. மாறாக தீவக அதிகார சபை முறைமை அமுல்ப்படுத்தப்பட்டால் அனைத்துத் தீவுகளும் நேரடியாக மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்படும். இச் சபைகளை உருவா்குவதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக நடைபறுகி்றன. இது தொடய்பில் ராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும்.

கடந்த காலங்களிலும் ஜனாதிபதியுடனான பேச்சுக்களின் போது தமிழ் மக்களுக்கு தீர்வுகளை வழங்குவதாகக்கூறி ஏமாறியுள்ளனர்.  எனவே எதிர்காலங்களில் எமக்கெதிரான செயற்பாடுகளுக்கு எதிராக களத்தில் இறங்கி செயற்பட வேண்டும். கைது செய்தாலென்ன சுட்டுக் கொன்றாலென்ன போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

எனவே அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புத்திஜீவிகள் இது தொடர்பில் கலந்தாலோசித்து இவ் நடவடிக்கைகளுக்கு எதிராக ஆரம்பத்திலேயே நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். - என்றார்

ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்த பின் வடகிழக்கில் நிலங்கள் அபகரிக்கப்பட்டுவருகின்றது -நிசாந்தன் சுட்டிக்காட்டு samugammedia ரணில் விக்கிரமசிங்கா ஆட்சிக்கு வந்த பின் வடகிழக்கில்  நிலங்கள் அபகரிக்கப்பட்டுவருகின்றது என தமிழ்த் தேசியக் கட்சி தேசிய அமைப்பாளர் நிசாந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். இன்றையதினம்  (12.04.2023 புதன்கிழமை) யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்ததார். அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் ஆணைக்குழுவால் தேர்தல் அறிவிக்கப்பட்டு ஜனாதிபதியால் காலதாமதம் செய்யப்பட்டுள்ளது. ஜனநாயகம் என்று கூறிவிட்டு ஜனநாயகத் தன்மையற்ற நடவடிக்கைகளையே மேற்காண்டு வருகின்றனர்.ரணில் விக்கிரமசி்ங்கா தன்னுடைய கட்சியையும் தன்னுடைய எதிர்காலத்தையும் நோக்காகக் கொண்டு ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதற்கான வழிவகைகளை மேற்கொள்கி்ன்றார்.பெரமுன கட்சியானது மக்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர்கள் ரணில்  விக்கிரமசிங்காவை பொதுவேட்பாளாக  தேர்தலில் நிறுத்தி தமது கட்சியை பலப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.பயங்கரவாதத் தடை சட்டம் தமிழர்களுக்காக உருவாக்கப்பட்டு காலப்போக்கில் ராஜபக்சாக்களின் ஆட்சிக்காலத்தில் சிங்களவர்கள் மீதும் பாய்ந்தது. தற்போது அந்தச் சட்டத்திற்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் உருவாக்கப்படவுள்ளது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிராக கட்சிகள் மற்றும் வெளிநாட்டுத் தூதரகங்களின் அழுத்தத்தால் தற்சமயம் அச் சட்ட மூலத்தை ஒத்திவைத்துள்ளால்கள்.  இந்த நாட்டில் ஒரு ஆர்ப்பாட்டத்தைக் கூட முன்னெடுக்க முடியாதளவிற்கு மிக மோசமானது.ரணில் விக்கிரமசிங்கா ஆட்சிக்கு வந்த பின் வடகிழக்கில் பல்வேறு நிலங்கள் அபகரிக்கப்பட்டுவருகின்றது. அந்தவகையில் இலங்கையிலுள்ள தீவுகள் அனைத்தும் வெளிநாட்டுக்கு விற்கப்படும் நடவடிக்கை காணப்படுகின்றது.மகாவலி அபிவிருத்தி சபை மூலம் மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்களோ அதைப் போல் தீவக அதிகார சபையை உருவாக்கி தீவுகளை வெளிநாட்டுக்கு விற்கப்படும் நிலை காணப்படுகின்றது. வடமாகாணத்திலே பிரபலமான தீவுகள் காணப்படுகின்றன. தற்பொழுது அத் தீவுகள் மாகாண சபை மற்றும் மாவட்ட அதிகார சபைகளுக்குட்பட்டே காணப்படுகின்றன. மாறாக தீவக அதிகார சபை முறைமை அமுல்ப்படுத்தப்பட்டால் அனைத்துத் தீவுகளும் நேரடியாக மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்படும். இச் சபைகளை உருவா்குவதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக நடைபறுகி்றன. இது தொடய்பில் ராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும்.கடந்த காலங்களிலும் ஜனாதிபதியுடனான பேச்சுக்களின் போது தமிழ் மக்களுக்கு தீர்வுகளை வழங்குவதாகக்கூறி ஏமாறியுள்ளனர்.  எனவே எதிர்காலங்களில் எமக்கெதிரான செயற்பாடுகளுக்கு எதிராக களத்தில் இறங்கி செயற்பட வேண்டும். கைது செய்தாலென்ன சுட்டுக் கொன்றாலென்ன போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புத்திஜீவிகள் இது தொடர்பில் கலந்தாலோசித்து இவ் நடவடிக்கைகளுக்கு எதிராக ஆரம்பத்திலேயே நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். - என்றார்

Advertisement

Advertisement

Advertisement