• Sep 19 2024

தமிழர்கள் மீது தொடரும் சிங்கள தேசத்தின் அடக்குமுறை – தொடரும் படுகொலைகள்!

Chithra / Jan 10th 2023, 12:53 pm
image

Advertisement

தமிழ் இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்கு முறைகளில் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு படுகொலையே மிக பிரதானமானதென  வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 49 ஆவது நினைவாண்டில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு  இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் இலங்கையில் தமிழ் இனம் என்பது தொடர்ச்சியாக ஒடுக்கப்பட்டு, அடக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டிருப்பதற்கு இந்த நிகழ்வே ஒரு சான்றாக அமைவதாக குறிப்பிட்டிருந்தார்.

இன்றும் கூட தமிழ் இனம் இவ்வாறே இருப்பதாவும் தவிசாளர் நிரோஸ் கவலை வெளியிட்டிருந்தார்.

மேலும் தமிழர்கள் சுதந்திரமாக வாழ வேண்டியவர்கள், சுதேச மற்றும் தமிழ் தேசிய இனம் என்ற ரீதியில் சரியான அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மக்கள் மீதான ஒடுக்கு முறைகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அதே நேரம் தமிழ் மக்களுடைய அரசியல் பண்பாட்டு கலாசார உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும்

அதன் அடிப்படையிலேயே இன்றை அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றதாக தியாகராஜா நிரோஸ் மேலும் தெரிவித்திருந்தார்.

தமிழர்கள் மீது தொடரும் சிங்கள தேசத்தின் அடக்குமுறை – தொடரும் படுகொலைகள் தமிழ் இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்கு முறைகளில் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு படுகொலையே மிக பிரதானமானதென  வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 49 ஆவது நினைவாண்டில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு  இவ்வாறு தெரிவித்தார்.அத்துடன் இலங்கையில் தமிழ் இனம் என்பது தொடர்ச்சியாக ஒடுக்கப்பட்டு, அடக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டிருப்பதற்கு இந்த நிகழ்வே ஒரு சான்றாக அமைவதாக குறிப்பிட்டிருந்தார்.இன்றும் கூட தமிழ் இனம் இவ்வாறே இருப்பதாவும் தவிசாளர் நிரோஸ் கவலை வெளியிட்டிருந்தார்.மேலும் தமிழர்கள் சுதந்திரமாக வாழ வேண்டியவர்கள், சுதேச மற்றும் தமிழ் தேசிய இனம் என்ற ரீதியில் சரியான அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.தமிழ் மக்கள் மீதான ஒடுக்கு முறைகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அதே நேரம் தமிழ் மக்களுடைய அரசியல் பண்பாட்டு கலாசார உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும்அதன் அடிப்படையிலேயே இன்றை அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றதாக தியாகராஜா நிரோஸ் மேலும் தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement