• May 17 2024

சிவாஜிலிங்கம் குத்து விளக்கு சின்னத்தில் மாநகர முதல்வர் வேட்பாளராக களமிறக்கம்!

Chithra / Jan 21st 2023, 1:50 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான வேட்புமனுத் தாக்கலில் தமிழ் தேசிய கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குத்து விளக்கு சின்னத்தில் (தமிழ் தேசிய கூட்டமைப்பு) முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

இந்த தகவலை தமிழ் தேசியக் கட்சியின் தகவல்கள் உறுதிப்படுத்தின.

அத்துடன், அந்தக் கூட்டமைப்பில் பங்காளி கட்சியான ரெலோ சார்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீபனும் கட்சியினால் தெரிவு செய்து அனுப்பப்படும் போட்டியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


தமிழ் மக்கள் கூட்டணி (மான் சின்னம்) சார்பில் முன்னாள் மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி (வீடு சின்னம்) சார்பில் முதல்வர் வேட்பாளராக எவரையும் நியமிக்கவில்லை எனவும் தேர்தலின் பின் தீர்மானிக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்-தமிழ் தேசிய மக்கள் முன்னணி (சைக்கிள் சின்னம்) சார்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முக்கிய நிர்வாகி, ஆசிரியர் திலீபன் திலீசன் களமிறக்கப்பட்டுள்ளார்.

சிவாஜிலிங்கம் குத்து விளக்கு சின்னத்தில் மாநகர முதல்வர் வேட்பாளராக களமிறக்கம் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான வேட்புமனுத் தாக்கலில் தமிழ் தேசிய கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குத்து விளக்கு சின்னத்தில் (தமிழ் தேசிய கூட்டமைப்பு) முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.இந்த தகவலை தமிழ் தேசியக் கட்சியின் தகவல்கள் உறுதிப்படுத்தின.அத்துடன், அந்தக் கூட்டமைப்பில் பங்காளி கட்சியான ரெலோ சார்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீபனும் கட்சியினால் தெரிவு செய்து அனுப்பப்படும் போட்டியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழ் மக்கள் கூட்டணி (மான் சின்னம்) சார்பில் முன்னாள் மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.இலங்கை தமிழ் அரசுக் கட்சி (வீடு சின்னம்) சார்பில் முதல்வர் வேட்பாளராக எவரையும் நியமிக்கவில்லை எனவும் தேர்தலின் பின் தீர்மானிக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்-தமிழ் தேசிய மக்கள் முன்னணி (சைக்கிள் சின்னம்) சார்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முக்கிய நிர்வாகி, ஆசிரியர் திலீபன் திலீசன் களமிறக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement