• May 21 2024

சிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலம் இன்று ஆரம்பம்!

Sharmi / Dec 7th 2022, 9:23 am
image

Advertisement

சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இன்று(07) ஆரம்பமாகிறது.

இதனை முன்னிட்டு, யாத்திரிகளின் பாதுகாப்புக்கு அவசியமான அனைத்து ஏற்பாடுகளும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, சிவனொளிபாதமலை யாத்திரைக்கு செல்லும் பிரதான வீதி முதல், மலை உச்சிவரையில் பெருமளவான காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் கூறியுள்ளார்.

சிவனொளிபாதமலை செல்லும் யாத்திரிகர்கள், முறையற்ற விதத்தில் குப்பைகளை அகற்றினால், அதற்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


சிவனொளிபாதமலைக்கு செல்லும் வாகனங்களை பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நல்லதண்ணி காவல்துறையினரின் ஊடாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக விசேட காவல்துறை பிரிவொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.


சிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலம் இன்று ஆரம்பம் சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இன்று(07) ஆரம்பமாகிறது.இதனை முன்னிட்டு, யாத்திரிகளின் பாதுகாப்புக்கு அவசியமான அனைத்து ஏற்பாடுகளும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.இதற்கமைய, சிவனொளிபாதமலை யாத்திரைக்கு செல்லும் பிரதான வீதி முதல், மலை உச்சிவரையில் பெருமளவான காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் கூறியுள்ளார்.சிவனொளிபாதமலை செல்லும் யாத்திரிகர்கள், முறையற்ற விதத்தில் குப்பைகளை அகற்றினால், அதற்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சிவனொளிபாதமலைக்கு செல்லும் வாகனங்களை பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.நல்லதண்ணி காவல்துறையினரின் ஊடாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக விசேட காவல்துறை பிரிவொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement