• Feb 02 2025

மூத்த சகோதரனால் பறிபோன ஆறு மாத குழந்தையின் உயிர் - இலங்கையில் சோகம்

Chithra / Feb 2nd 2025, 7:24 am
image

 

களுத்துறை பகுதியில் குழந்தை ஒன்று தனது மூத்த சகோதரனால் நசுக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

ஆறு மாதங்களேயான குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார்  தெரிவித்துள்ளனர். 

வெனிவெல்கெட்டிய பகுதியைச் சேர்ந்த வினுலை திஹாக்யா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குறித்த குழந்தை தனது மூத்த சகோதரனுடன் உறங்கிக்கொண்டிருக்கும் போது அவரது உடலால் நசுக்கப்பட்டதன் காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பின்னர் குழந்தை களுத்துறையில் உள்ள நாகொட குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதித்த வேளையில் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார்   தெரிவித்துள்ளனர்.

மூத்த சகோதரனால் பறிபோன ஆறு மாத குழந்தையின் உயிர் - இலங்கையில் சோகம்  களுத்துறை பகுதியில் குழந்தை ஒன்று தனது மூத்த சகோதரனால் நசுக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆறு மாதங்களேயான குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார்  தெரிவித்துள்ளனர். வெனிவெல்கெட்டிய பகுதியைச் சேர்ந்த வினுலை திஹாக்யா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.குறித்த குழந்தை தனது மூத்த சகோதரனுடன் உறங்கிக்கொண்டிருக்கும் போது அவரது உடலால் நசுக்கப்பட்டதன் காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பின்னர் குழந்தை களுத்துறையில் உள்ள நாகொட குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதித்த வேளையில் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார்   தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement