• Nov 23 2024

வெட் வரி சட்டமூலத்திற்கு சுதந்திரக் கட்சி கடும் எதிர்ப்பு..!

Chithra / Dec 11th 2023, 8:53 am
image

 

வெற் வரி சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்ட அக்கட்சியின் பிரசார செயலாளர் திசர குணசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

வற் வரி திருத்தச் சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நேற்றைய தினம் காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகியிருந்தது.

எனினும், மன்றில் ஏற்பட்ட அமளி துமளி காரணமாக நேற்றைய நாடாளுமன்ற அமர்வு இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், குறித்த சட்டமூலங்கள் மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிக கவனம் செலுத்தவில்லை என சமூக ஆர்வாலர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.

இன்று நாடாளுமன்றத்தில் சமர்பபிக்கப்படவுள்ள வற் வரி திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிப்பது கட்சியின் நிலைப்பாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சட்டமூலத்துக்கு எதிராக அல்லது ஆதரவாக வாக்களிப்பது தொடர்பில் ஏனைய அரசியல் கட்சிகள் இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

வெட் வரி சட்டமூலத்திற்கு சுதந்திரக் கட்சி கடும் எதிர்ப்பு.  வெற் வரி சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.அறிக்கை ஒன்றை வெளியிட்ட அக்கட்சியின் பிரசார செயலாளர் திசர குணசிங்க இதனை தெரிவித்துள்ளார்.வற் வரி திருத்தச் சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நேற்றைய தினம் காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகியிருந்தது.எனினும், மன்றில் ஏற்பட்ட அமளி துமளி காரணமாக நேற்றைய நாடாளுமன்ற அமர்வு இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.இந்த நிலையில், குறித்த சட்டமூலங்கள் மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிக கவனம் செலுத்தவில்லை என சமூக ஆர்வாலர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.இன்று நாடாளுமன்றத்தில் சமர்பபிக்கப்படவுள்ள வற் வரி திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிப்பது கட்சியின் நிலைப்பாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, குறித்த சட்டமூலத்துக்கு எதிராக அல்லது ஆதரவாக வாக்களிப்பது தொடர்பில் ஏனைய அரசியல் கட்சிகள் இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement