• Nov 22 2024

மிஹிந்தலை விகாரையின் விகாராதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் - கடமையிலிருந்த காவல்துறையினரும் அகற்றப்பட்டனரா..?

Chithra / Dec 11th 2023, 9:03 am
image

 

வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலை விகாரையில் இருந்து இராணுவத்தினர் திரும்பப் பெறப்பட்டுள்ள நிலையில், அந்த இடங்களில் காவல்துறையினர் தொடர்ந்தும் கடமையில் ஈடுபடுவார்கள் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த விகாரையிலிருந்து காவல்துறையினர் அகற்றப்பட்டதாகக் கூறப்படும் கூற்றுக்களை காவல்துறை மறுத்துள்ளது.

மிஹிந்தலை ரஜமஹா விகாரையில் பல்வேறு பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவ அதிகாரிகளை நீக்கும் தீர்மானத்தின் கீழ், நீண்ட காலமாக அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த காவல்துறை அதிகாரிகளும் மீளப் பெறப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

எவ்வாறாயினும், மிஹிந்தலை ரஜமஹா விகாரையில் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டிருந்த காவல்துறை அதிகாரிகளை மீளப்பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என காவல்துறை அறிவித்துள்ளது.

முன்னதாக, மிஹிந்தலை விகாரையில் பல்வேறு பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த 200 இற்கும் மேற்பட்ட இராணுவ சிப்பாய்களுடன் உள்ள சிலரால் தமக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக குறித்த விகாரையின் விகாராதிபதி தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து உடன் அமுலுக்கு வரும் வகையில் இராணுவத்தினர் அங்கிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.

படையினருடன் செயற்படும் இரண்டு சிவில் பிரஜைகளால் தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக விகாராதிபதி குறிப்பிட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முறையிட்டிருந்தார்.

எனினும் குறித்த இருவரும் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருந்தது.

மிஹிந்தலை விகாரையின் விகாராதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் - கடமையிலிருந்த காவல்துறையினரும் அகற்றப்பட்டனரா.  வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலை விகாரையில் இருந்து இராணுவத்தினர் திரும்பப் பெறப்பட்டுள்ள நிலையில், அந்த இடங்களில் காவல்துறையினர் தொடர்ந்தும் கடமையில் ஈடுபடுவார்கள் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.அத்துடன், குறித்த விகாரையிலிருந்து காவல்துறையினர் அகற்றப்பட்டதாகக் கூறப்படும் கூற்றுக்களை காவல்துறை மறுத்துள்ளது.மிஹிந்தலை ரஜமஹா விகாரையில் பல்வேறு பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவ அதிகாரிகளை நீக்கும் தீர்மானத்தின் கீழ், நீண்ட காலமாக அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த காவல்துறை அதிகாரிகளும் மீளப் பெறப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.எவ்வாறாயினும், மிஹிந்தலை ரஜமஹா விகாரையில் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டிருந்த காவல்துறை அதிகாரிகளை மீளப்பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என காவல்துறை அறிவித்துள்ளது.முன்னதாக, மிஹிந்தலை விகாரையில் பல்வேறு பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த 200 இற்கும் மேற்பட்ட இராணுவ சிப்பாய்களுடன் உள்ள சிலரால் தமக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக குறித்த விகாரையின் விகாராதிபதி தெரிவித்திருந்தார்.இதனையடுத்து உடன் அமுலுக்கு வரும் வகையில் இராணுவத்தினர் அங்கிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.படையினருடன் செயற்படும் இரண்டு சிவில் பிரஜைகளால் தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக விகாராதிபதி குறிப்பிட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முறையிட்டிருந்தார்.எனினும் குறித்த இருவரும் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருந்தது.

Advertisement

Advertisement

Advertisement