• Dec 01 2024

மூதூரில் டெங்கை கட்டுப்படுத்த புகை விசிறல்

Tharmini / Nov 23rd 2024, 9:54 am
image

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள தோப்பூர் - மேற்கு கிராமத்தில்,

இன்று (23) காலை டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான புகை விசிறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி ஹில்மி முகைதீன் அவர்களின் ஆலோசனைகளுக்கு அமைவாக வீடுகள் ,பாடசாலைகள் , பொது இடங்கள் ,

டெங்கு பரவுவதற்கு ஏதுவான இடங்களில் புகை விசிறப்பட்டது.

அண்மைக்காலமாக மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள,

தோப்பூர் - மேற்கு பகுதியில் டெங்கு நோயாளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு அதிகமானோர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 




 


மூதூரில் டெங்கை கட்டுப்படுத்த புகை விசிறல் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள தோப்பூர் - மேற்கு கிராமத்தில், இன்று (23) காலை டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான புகை விசிறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி ஹில்மி முகைதீன் அவர்களின் ஆலோசனைகளுக்கு அமைவாக வீடுகள் ,பாடசாலைகள் , பொது இடங்கள் ,டெங்கு பரவுவதற்கு ஏதுவான இடங்களில் புகை விசிறப்பட்டது.அண்மைக்காலமாக மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள, தோப்பூர் - மேற்கு பகுதியில் டெங்கு நோயாளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு அதிகமானோர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

Advertisement

Advertisement

Advertisement