• May 20 2024

இலங்கையின் கடன் நெருக்கடிக்கு தீர்வு...! ஜி20 நாடுகளின் தலைவர்கள் பச்சைக்கொடி...!samugammedia

Sharmi / Sep 11th 2023, 12:51 pm
image

Advertisement

இலங்கை, கானா போன்ற நாடுகளின் கடன் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குவதற்கு ஜி20 நாடுகளின் தலைவர்கள் இணங்கியுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இது தொடர்பில் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஜி20 நாடுகள் அர்த்தபூர்வமான கடன் நிவாரணத்தை வழங்கவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் மூலம் கடந்த வருடங்களில்  தொடர்ச்சியாக எதிர்கொண்ட பொருளாதார அதிர்ச்சியிலிருந்து மீள முயலும் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகள் மீண்டும் தங்களை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

தங்களின் மிக முக்கியமான தேவைகளில் முதலீடு செய்ய முடியும் எனவும் பைடன் தெரிவித்துள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அதேவேளை,இலங்கை, கானா போன்ற நாடுகளின் தொடரும் கடன் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான தங்களின் முயற்சிகளை இரட்டிப்பாக்குவதற்கு புதுடில்லியில் தலைவர்கள் தங்கள் அர்ப்பணிப்பை வெளியிட்டனர்.

உலக வங்கி சர்வதேச நாணயநிதியத்தின் கூட்டங்களில் அர்த்தபூர்வமான முன்னேற்றத்தை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி பைடன் தெரிவித்தார் எனவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இலங்கையின் கடன் நெருக்கடிக்கு தீர்வு. ஜி20 நாடுகளின் தலைவர்கள் பச்சைக்கொடி.samugammedia இலங்கை, கானா போன்ற நாடுகளின் கடன் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குவதற்கு ஜி20 நாடுகளின் தலைவர்கள் இணங்கியுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.இது தொடர்பில் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஜி20 நாடுகள் அர்த்தபூர்வமான கடன் நிவாரணத்தை வழங்கவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் மூலம் கடந்த வருடங்களில்  தொடர்ச்சியாக எதிர்கொண்ட பொருளாதார அதிர்ச்சியிலிருந்து மீள முயலும் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகள் மீண்டும் தங்களை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். தங்களின் மிக முக்கியமான தேவைகளில் முதலீடு செய்ய முடியும் எனவும் பைடன் தெரிவித்துள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.அதேவேளை,இலங்கை, கானா போன்ற நாடுகளின் தொடரும் கடன் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான தங்களின் முயற்சிகளை இரட்டிப்பாக்குவதற்கு புதுடில்லியில் தலைவர்கள் தங்கள் அர்ப்பணிப்பை வெளியிட்டனர். உலக வங்கி சர்வதேச நாணயநிதியத்தின் கூட்டங்களில் அர்த்தபூர்வமான முன்னேற்றத்தை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி பைடன் தெரிவித்தார் எனவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement