• Jan 13 2025

தீவக மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு! - வடக்கு ஆளுநர் தெரிவிப்பு

Chithra / Dec 29th 2024, 10:27 am
image

தீவக மக்களின் பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இது தொடர்பில் வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவனுடனும் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புங்குடுதீவில்  (28.12.2024)  இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஆளுநர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

குடிநீரின் தேவை இன்று தீவகப் பகுதியில் மாத்திரம் அல்ல யாழ்ப்பாண நகரப் பகுதியிலும் உணரப்பட்டுள்ளது.

இன்று அங்கு குடிதண்ணீரின் தரம் மற்றும் அளவு தொடர்பில் பல பிரச்சினைகள் இருக்கின்றன. கடல் நீரை நன்னீராக்கி குடிநீர் விநியோகத்துக்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தாலும் வேறு குடிநீர் மூலங்களையும் கண்டறியவேண்டியவர்களாக நாங்கள் இருக்கின்றோம்.

தொண்டர் கந்தையா திருநாவுக்கரசுவின் எண்ணம் சிந்தனை நல்நோக்குடன் இருந்தமையால் அவர் அன்று ஆரம்பித்த வட இலங்கை சர்வோதய சங்கம் வியாபித்து விருட்சமாக வளர்ந்திருக்கின்றது. நாம் நல்ல எண்ணத்துடன் எதை ஆரம்பித்தாலும் அதை இறை சக்தியாவது வெற்றிகரமாக நடத்தி முடிக்கும்.

இந்த ஊர் மக்கள் புலம்பெயர்ந்து சென்றாலும் தமது சொந்த மண்ணை மறக்கவில்லை. அதனால்தான் அவர்கள் இன்றும் உங்களுக்கு உதவியைச் செய்கின்றார்கள். 

இவ்வாறு உதவி செய்ய முன்வந்த அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். இவ்வாறான உதவிகளை உரிய முறையில் நீங்கள் பயன்படுத்தி பலன்பெறவேண்டும் என ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.

இதேவேளை, புங்குடுதீவு பிரதேசத்தில் பொலிஸ் காவலரண் தேவை எனவும் ஏதாவது ஒரு வங்கி அமைக்கப்பட வேண்டும் எனவும் அந்தப் பிரதேச மக்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.


தீவக மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு - வடக்கு ஆளுநர் தெரிவிப்பு தீவக மக்களின் பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.அத்தோடு, இது தொடர்பில் வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவனுடனும் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.புங்குடுதீவில்  (28.12.2024)  இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.ஆளுநர் மேலும் கருத்து தெரிவிக்கையில், குடிநீரின் தேவை இன்று தீவகப் பகுதியில் மாத்திரம் அல்ல யாழ்ப்பாண நகரப் பகுதியிலும் உணரப்பட்டுள்ளது.இன்று அங்கு குடிதண்ணீரின் தரம் மற்றும் அளவு தொடர்பில் பல பிரச்சினைகள் இருக்கின்றன. கடல் நீரை நன்னீராக்கி குடிநீர் விநியோகத்துக்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தாலும் வேறு குடிநீர் மூலங்களையும் கண்டறியவேண்டியவர்களாக நாங்கள் இருக்கின்றோம்.தொண்டர் கந்தையா திருநாவுக்கரசுவின் எண்ணம் சிந்தனை நல்நோக்குடன் இருந்தமையால் அவர் அன்று ஆரம்பித்த வட இலங்கை சர்வோதய சங்கம் வியாபித்து விருட்சமாக வளர்ந்திருக்கின்றது. நாம் நல்ல எண்ணத்துடன் எதை ஆரம்பித்தாலும் அதை இறை சக்தியாவது வெற்றிகரமாக நடத்தி முடிக்கும்.இந்த ஊர் மக்கள் புலம்பெயர்ந்து சென்றாலும் தமது சொந்த மண்ணை மறக்கவில்லை. அதனால்தான் அவர்கள் இன்றும் உங்களுக்கு உதவியைச் செய்கின்றார்கள். இவ்வாறு உதவி செய்ய முன்வந்த அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். இவ்வாறான உதவிகளை உரிய முறையில் நீங்கள் பயன்படுத்தி பலன்பெறவேண்டும் என ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.இதேவேளை, புங்குடுதீவு பிரதேசத்தில் பொலிஸ் காவலரண் தேவை எனவும் ஏதாவது ஒரு வங்கி அமைக்கப்பட வேண்டும் எனவும் அந்தப் பிரதேச மக்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement