• Nov 23 2024

பதவி மோகத்தில் தமிழரசுக் கட்சியை சிதைக்க சிலர் சதி முயற்சி...! சம்பந்தன் காட்டம்...!

Sharmi / Feb 16th 2024, 12:43 pm
image

நீண்ட வரலாற்றைக் கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியை சிதைக்கச் சிலர் சதித் திட்டம் தீட்டுவதாக  தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சிதைக்கச் சிலர் சதித் திட்டம் தீட்டுகின்றனர். பதவி ஆசையில் அவர்கள் இந்தச் சதி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இது நன்றாகப் புரியும். 

அவர்களின் சதித் திட்டம் வெற்றியளிக்க நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். 

அதேவேளை, நீதிமன்றங்களின் இடைக்காலத் தடை உத்தரவுகள் தொடர்பில் தான் இப்போது கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை எனவும் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் நிர்வாகிகள் தெரிவு தொடர்பில் இணக்க அடிப்படையில் எட்டப்பட்ட முடிவுகளை பொதுச் சபை அங்கீகரிக்காதவிடத்து அல்லது அந்தத் தெரிவுகளில் குழப்பங்கள் நிலவுமிடத்து,தேர்தல் முறைமை மூலம் தெரிவுகளை நடத்துங்கள் என்றும், அன்றைய தினமே மாநாட்டையும் நடத்தி முடியுங்கள் என்றும் கடந்த செவ்வாய்க்கிழமை தன்னைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் (இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டவர்) சம்பந்தன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பதவி மோகத்தில் தமிழரசுக் கட்சியை சிதைக்க சிலர் சதி முயற்சி. சம்பந்தன் காட்டம். நீண்ட வரலாற்றைக் கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியை சிதைக்கச் சிலர் சதித் திட்டம் தீட்டுவதாக  தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சிதைக்கச் சிலர் சதித் திட்டம் தீட்டுகின்றனர். பதவி ஆசையில் அவர்கள் இந்தச் சதி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இது நன்றாகப் புரியும். அவர்களின் சதித் திட்டம் வெற்றியளிக்க நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். அதேவேளை, நீதிமன்றங்களின் இடைக்காலத் தடை உத்தரவுகள் தொடர்பில் தான் இப்போது கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை எனவும் தெரிவித்தார்.இலங்கை தமிழரசுக் கட்சியின் நிர்வாகிகள் தெரிவு தொடர்பில் இணக்க அடிப்படையில் எட்டப்பட்ட முடிவுகளை பொதுச் சபை அங்கீகரிக்காதவிடத்து அல்லது அந்தத் தெரிவுகளில் குழப்பங்கள் நிலவுமிடத்து,தேர்தல் முறைமை மூலம் தெரிவுகளை நடத்துங்கள் என்றும், அன்றைய தினமே மாநாட்டையும் நடத்தி முடியுங்கள் என்றும் கடந்த செவ்வாய்க்கிழமை தன்னைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் (இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டவர்) சம்பந்தன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement