• May 19 2024

ரஷ்யாவிற்கு ஆயுத விநியோகம் செய்த தென்னாபிரிக்கா : விசாரணைகள் ஆரம்பம்! samugammedia

Tamil nila / May 28th 2023, 4:28 pm
image

Advertisement

ரஷ்யாவிற்கு ஆயுதங்களை அனுப்பியதாக அமெரிக்கா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரிக்கவுள்ளதாக தென்னாப்பிரிக்கா அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு கேப்டவுன் அருகே உள்ள கடற்படை தளத்தில் இருந்து ரஷ்ய கப்பல் ஒன்று ரஷ்யாவுக்கான ஆயுதங்களை கொண்டு சென்றதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதனை தென்னாப்பிரிக்கா மறுத்த நிலையில் இது குறித்து விசாரணைகளை முன்னெடுக்க அந்நாட்டின் அதிபர் குழுவொன்றை நியமித்தார்.

இந்தக் கூற்றுக்கள் இந்த மாத தொடக்கத்தில் இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர ரீதியில் விரிசலை  உண்டாக்கியது.

தென்னாப்பிரிக்க அரசாங்கம் உக்ரைனில் நடக்கும் போரில் நடுநிலை நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக பலமுறை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“குற்றச்சாட்டுகளின் தீவிரம்,  தென்னாப்பிரிக்காவின் சர்வதேச உறவுகளில் இந்த விஷயத்தின் தாக்கம் ஆகியவற்றின் காரணமாக விசாரணையை நிறுவ ஜனாதிபதி முடிவு செய்தார்” என்று ஜனாதிபதி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விசாரணை முடிந்து இரண்டு வாரங்களுக்குள் இறுதி அறிக்கையை ஜனாதிபதி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவிற்கு ஆயுத விநியோகம் செய்த தென்னாபிரிக்கா : விசாரணைகள் ஆரம்பம் samugammedia ரஷ்யாவிற்கு ஆயுதங்களை அனுப்பியதாக அமெரிக்கா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரிக்கவுள்ளதாக தென்னாப்பிரிக்கா அறிவித்துள்ளது.கடந்த ஆண்டு கேப்டவுன் அருகே உள்ள கடற்படை தளத்தில் இருந்து ரஷ்ய கப்பல் ஒன்று ரஷ்யாவுக்கான ஆயுதங்களை கொண்டு சென்றதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதனை தென்னாப்பிரிக்கா மறுத்த நிலையில் இது குறித்து விசாரணைகளை முன்னெடுக்க அந்நாட்டின் அதிபர் குழுவொன்றை நியமித்தார்.இந்தக் கூற்றுக்கள் இந்த மாத தொடக்கத்தில் இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர ரீதியில் விரிசலை  உண்டாக்கியது.தென்னாப்பிரிக்க அரசாங்கம் உக்ரைனில் நடக்கும் போரில் நடுநிலை நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக பலமுறை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.“குற்றச்சாட்டுகளின் தீவிரம்,  தென்னாப்பிரிக்காவின் சர்வதேச உறவுகளில் இந்த விஷயத்தின் தாக்கம் ஆகியவற்றின் காரணமாக விசாரணையை நிறுவ ஜனாதிபதி முடிவு செய்தார்” என்று ஜனாதிபதி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.விசாரணை முடிந்து இரண்டு வாரங்களுக்குள் இறுதி அறிக்கையை ஜனாதிபதி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement