• Apr 27 2024

மாணவர்கள் தொடர்பில் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் நெகிழ்ச்சி!!

crownson / Dec 27th 2022, 11:01 am
image

Advertisement

சர்வதேச காரத்தே போட்டிகளில் கிழக்கு மாகாணம் சார்பாக வெற்றிபெற்ற மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண சம்மேளன தலைவர் முஹம்மத் இக்பால் தலைமையில் சாய்ந்தமருதில் இடம்பெற்றது. 

குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய உபவேந்தர் றமீஸ் அபூபக்கர் உரையாற்றும்போது,

பாடசாலைக் காலங்களில் தேசிய போட்டிகளில் பதக்கங்களைப் பெற்று கறுப்புப்பட்டி தரமுடையவர்கள் கராத்தே விளையாட்டில் அனுபவம், திறமையைக் காண்பிக்கின்றார்கள்.

பாடசாலை மட்டத்திலிருந்து பல வருடங்கள் ஒரு மாணவனை உருவாக்குவதற்காக கஷ்டப்பட்டு உழைத்த ஆசிரியர் வெற்றியின் பங்களராக போற்றப்படுவதில்லை.

மாறாக வெற்றிபெறுகின்ற இன்றைய நிலையில் யார் பயிற்றுவிப்பளராக உள்ளாரோ அவரே வெற்றிக்கு சொந்தக்காரனாகின்றார்.

அதனோடு இம்மாணவர்களை உருவாக்குவதற்காக கஷ்டப்பட்டு உழைத்த ஆசிரியர்களும் பாராட்டப்பட வேண்டும்.

கராத்தே ஒரு விளையாட்டாக பயிற்றுவிக்கப்பட்டாலும், கராத்தேயின் பாரம்பரியங்கள் பேணப்படவேண்டும்.

போட்டி ஒன்றில் வெற்றிபெறுவது என்பதைவிட, எவ்வாறு வெற்றி பெறுகிறோம் என்பதுதான் முக்கியமாகும்.

விளையாட்டுத்துறையில் பாடசாலை காலங்களில் திறமையை காண்பித்த மாணவர்கள் இலங்கையின் முன்னணி பல்கலைக் கழகங்களுக்கு அனுப்படுகின்றார்கள்.இது ஒரு வரப்பிரசாத மாகும்.

எனவே, எதிர்காலத்தில் இம்மாணவர்கள் சர்வதேச ரீதியில் சாதிக்க வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன் என்றும் தெரிவித்தார்.

இங்கு 82  இளைஞர் யூவதிகளுக்கான  சான்றிதழ்களை உபவேந்தர்  வழங்கி வைத்தார்.

மேலும் கிழக்கு மாகாண கராத்தே சம்மேளனத்தில் நீண்ட காலமாக சேவையாற்றி வருகின்ற சிரேஸ்ட போதனாசிரியர்கள் ஐந்து பேருக்கு அதி சிறப்பு விருதுகள்  வழங்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

மாணவர்கள் தொடர்பில் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் நெகிழ்ச்சி சர்வதேச காரத்தே போட்டிகளில் கிழக்கு மாகாணம் சார்பாக வெற்றிபெற்ற மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண சம்மேளன தலைவர் முஹம்மத் இக்பால் தலைமையில் சாய்ந்தமருதில் இடம்பெற்றது. குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய உபவேந்தர் றமீஸ் அபூபக்கர் உரையாற்றும்போது,பாடசாலைக் காலங்களில் தேசிய போட்டிகளில் பதக்கங்களைப் பெற்று கறுப்புப்பட்டி தரமுடையவர்கள் கராத்தே விளையாட்டில் அனுபவம், திறமையைக் காண்பிக்கின்றார்கள்.பாடசாலை மட்டத்திலிருந்து பல வருடங்கள் ஒரு மாணவனை உருவாக்குவதற்காக கஷ்டப்பட்டு உழைத்த ஆசிரியர் வெற்றியின் பங்களராக போற்றப்படுவதில்லை. மாறாக வெற்றிபெறுகின்ற இன்றைய நிலையில் யார் பயிற்றுவிப்பளராக உள்ளாரோ அவரே வெற்றிக்கு சொந்தக்காரனாகின்றார். அதனோடு இம்மாணவர்களை உருவாக்குவதற்காக கஷ்டப்பட்டு உழைத்த ஆசிரியர்களும் பாராட்டப்பட வேண்டும்.கராத்தே ஒரு விளையாட்டாக பயிற்றுவிக்கப்பட்டாலும், கராத்தேயின் பாரம்பரியங்கள் பேணப்படவேண்டும். போட்டி ஒன்றில் வெற்றிபெறுவது என்பதைவிட, எவ்வாறு வெற்றி பெறுகிறோம் என்பதுதான் முக்கியமாகும்.விளையாட்டுத்துறையில் பாடசாலை காலங்களில் திறமையை காண்பித்த மாணவர்கள் இலங்கையின் முன்னணி பல்கலைக் கழகங்களுக்கு அனுப்படுகின்றார்கள்.இது ஒரு வரப்பிரசாத மாகும்.எனவே, எதிர்காலத்தில் இம்மாணவர்கள் சர்வதேச ரீதியில் சாதிக்க வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன் என்றும் தெரிவித்தார்.இங்கு 82  இளைஞர் யூவதிகளுக்கான  சான்றிதழ்களை உபவேந்தர்  வழங்கி வைத்தார். மேலும் கிழக்கு மாகாண கராத்தே சம்மேளனத்தில் நீண்ட காலமாக சேவையாற்றி வருகின்ற சிரேஸ்ட போதனாசிரியர்கள் ஐந்து பேருக்கு அதி சிறப்பு விருதுகள்  வழங்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement