• Jul 19 2025

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன யாழிற்கு இன்று திடீர் விஜயம்!

shanuja / Jul 18th 2025, 8:32 pm
image

சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன, யாழ்ப்பாணத்திற்கு இன்று திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். 


யாழ்ப்பாணத்திலுள்ள பகுதிகளை நேரில் ஆராய்வதற்காக அவர் இந்த திடீர் விஜயத்தை மேற்கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 


அதன்படி இன்று யாழுக்கு விஜயம் மேற்கொண்ட சபாநாயகர் முற்பகல் யாழ்ப்பாணம் கோட்டைக்கு சென்று பார்வையிட்டிருந்தார்.


அங்குள்ள பகுதிகளையும் வரலாற்று சின்னங்களையும் ஒவ்வொன்றாக ஆராய்ந்தார். அதன்பின்னர் யாழ்ப்பாணத்தின் பிரபலமான பொதுநூலகத்தையும் நேரில் சென்று ஆராய்ந்தார். 


அவரது இந்த திடீர் விஜயம் தனிப்பட்ட விஜயமா அல்லது உத்தியோகபூர்வ விஜயமா என்பது குறித்து ஊடகங்கள் கேள்வியெழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன யாழிற்கு இன்று திடீர் விஜயம் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன, யாழ்ப்பாணத்திற்கு இன்று திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். யாழ்ப்பாணத்திலுள்ள பகுதிகளை நேரில் ஆராய்வதற்காக அவர் இந்த திடீர் விஜயத்தை மேற்கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி இன்று யாழுக்கு விஜயம் மேற்கொண்ட சபாநாயகர் முற்பகல் யாழ்ப்பாணம் கோட்டைக்கு சென்று பார்வையிட்டிருந்தார்.அங்குள்ள பகுதிகளையும் வரலாற்று சின்னங்களையும் ஒவ்வொன்றாக ஆராய்ந்தார். அதன்பின்னர் யாழ்ப்பாணத்தின் பிரபலமான பொதுநூலகத்தையும் நேரில் சென்று ஆராய்ந்தார். அவரது இந்த திடீர் விஜயம் தனிப்பட்ட விஜயமா அல்லது உத்தியோகபூர்வ விஜயமா என்பது குறித்து ஊடகங்கள் கேள்வியெழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement