• Jan 11 2025

சர்வ மதத் தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றார் சபாநாயகர்!

Chithra / Jan 6th 2025, 3:15 pm
image

 

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன கடந்த சனிக்கிழமை (04) வரலாற்றுச் சிறப்பு மிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று வழிபட்டு ஆசிகளைப் பெற்றுக்கொண்டார். 

இந்த வழிபாட்டில் தியவடன நிலமே நிலங்க தேல பண்டாரவும் இணைந்துகொண்டார்.

அதனைத் தொடர்ந்து மல்வத்து மகா விகாரைக்குச் சென்ற சாபாநாயகர் மல்வத்து பீட மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரைச் சந்தித்து ஆசிகளைப் பெற்றுக்கொண்டார். 

அதன் பின்னர் சபாநாயகர் கண்டி ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

அதன் பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) சபாநாயகர் தெவட்டகஹ பள்ளிவாசலுக்குச் சென்று மதத் தலைவர்களைச் சந்தித்ததுடன், அதனைத் தொடர்ந்து கொழும்பு மறை மாவட்ட ஆயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையையும் சந்தித்து ஆசி பெற்றார்.


சர்வ மதத் தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றார் சபாநாயகர்  சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன கடந்த சனிக்கிழமை (04) வரலாற்றுச் சிறப்பு மிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று வழிபட்டு ஆசிகளைப் பெற்றுக்கொண்டார். இந்த வழிபாட்டில் தியவடன நிலமே நிலங்க தேல பண்டாரவும் இணைந்துகொண்டார்.அதனைத் தொடர்ந்து மல்வத்து மகா விகாரைக்குச் சென்ற சாபாநாயகர் மல்வத்து பீட மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரைச் சந்தித்து ஆசிகளைப் பெற்றுக்கொண்டார். அதன் பின்னர் சபாநாயகர் கண்டி ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.அதன் பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) சபாநாயகர் தெவட்டகஹ பள்ளிவாசலுக்குச் சென்று மதத் தலைவர்களைச் சந்தித்ததுடன், அதனைத் தொடர்ந்து கொழும்பு மறை மாவட்ட ஆயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையையும் சந்தித்து ஆசி பெற்றார்.

Advertisement

Advertisement

Advertisement