வடமேல் மாகாண சபையின் கீழ் உள்ள புத்தளம் தள வைத்தியசாலையை தரமுயர்த்தல், அபிவிருத்தி செய்தல் மற்றும் அங்கு நீண்ட காலமாக நிலவி வரும் குறைபாடுகள் தொடர்பில் ஆராயும் விஷேட கலந்துரையாடலொன்று நேற்று (29) வடமேல் மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அலி சப்ரி ரஹீம், சிந்தக அமல் மாயாதுன்ன , வடமேல் மாகாண முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் பரீத், வைத்தியர் முஹம்மது ஜௌசி, புத்தளம் தள வைத்தியசாலை அபிவிருத்தி குழு உப தலைவர் எஸ்.சந்திரதாச, செயலாளர் ஓய்வு பெற்ற நிர்வாக உத்தியோகத்தர் எச்.எம்.எம்.சபீக், பொருளாளர் பொதுசுகாதார பரிசோதகர் முகம்மது அபுஷாலிப் மற்றும் வைத்தியர் எம்.ஸ்ரீதரன் உட்பட மதத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வைத்தியர்கள், வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினர் புத்தளம் தள வைத்தியசாலை குறைபாடுகள் தொடர்பில் ஆளுநர் நசீர் அஹ்மடிற்கு தெளிவுபடுத்தினார்கள்.
கற்பிட்டி, முந்தல், வன்னாத்தவில்லு, புத்தளம் மற்றும் கருவலகஸ்வெவ உள்ளிட்ட பல பிரதேச செயலகத்திற்குற்பட்ட பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான மூவின மக்களும் தமது மருத்துவ தேவைகளை பெற்றுக்கொள்வதற்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கே வருகை தருவதாக இதன்போது ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும், புத்தளம் நகரை அண்டிய பகுதியில் பொலிஸ் உட்பட முப்படையினரின் முகாம்களும் இருப்பதாகவும் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இவ்வாறு, நாளொன்றுக்கு பெரும் எண்ணிக்கையிலானோர் தமது மருத்துவ தேவைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு சமூகமளிக்கின்ற போதிலும், அவர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்கான போதுமான வசதிகள் இன்மையால் வைத்தியசாலை நிர்வாகம் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், அபிவிருத்தி உள்ளிட்ட தேவைகளுக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாகாண சபையால் வழங்கப்படுகின்ற நிதி போதுமானதாக இல்லை என இங்கு சுட்டிக்காட்டப்பட்டதுடன், வழங்கப்படும் நிதியை அதிகரித்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் அல்லது புத்தளம் தள வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்குமாறும் ஆளுநரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கும் புத்தளம் தள வைத்தியசாலையில் நோயாளிகள் மாத்திரமன்றி, வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் மற்றும் பயிற்சி வைத்தியர்களும் , ஊழியர்களும் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர் எனவும் தெரிவித்தனர்.
அத்துடன், வடமேல் மாகாணத்திற்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள தாங்கள், புத்தளம் தள வைத்தியசாலைக்கு அதிகாரிகளுடன் கள விஜயம் செய்து அங்கு காணப்படும் குறைபாடுகளை ஆராயுமாறும் அந்த குழுவினர் ஆளுநரை வேண்டிக்கொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர்கள், வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினர் முன்வைத்த பிரச்சினைகளை மாகாண ஆளுநர் நசீர் அஹ்மட் அமைதியாக செவிமெடுத்தார்.
இதன்போது, மாகாணத்தின் சுகாதார தேவைக்காக மத்திய அரசினால் மாகாண சபைக்கு ஒதுக்கப்படுகின்ற நிதி குறைவாக இருக்கிறது. கிடைக்கும் நிதியை மாகாண சபையின் கீழ் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் வழங்க வேண்டும்.
கிடைக்கின்ற சொற்ப நிதியைக் கொண்டு அனைத்து வைத்தியசாலைகளுக்கும் பிரித்துக்கொடுப்பது என்பது எமக்கு பெரும் சவாலாக உள்ளது. எனவேதான் மத்திய அரசினால் வழங்கப்படும் நிதியை அதிகரித்துக் கொடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளேன் எனவும் தெரிவித்தார்.
அத்துடன், எமது கட்டுப்பாட்டில் உள்ள வைத்தியசாலையை விடுவிப்பது என்பது மாகாணத்திற்கு நஷ்டமாகும். எம்மால் நிர்வாகிக்க முடியாவிட்டால் மாத்திரமே நாம் மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே, மத்திய அரசினால் நிதி அதிகரித்துக் கொடுக்கப்படும் பட்சத்தில் புத்தளம் தள வைத்தியசாலையின் அபிவிருத்தி உட்பட அங்கு காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
மேலும், அடுத்த மாதம் 12 ஆம் திகதி புத்தளம் மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளதுடன், அந்த கூட்டம் முடிவடைந்த பின்னர் புத்தளம் தள வைத்தியசாலைக்கு கள விஜயம் ஒன்றை மேற்கொள்வதாகவும் ஆளுநர் வாக்குறுதியளித்தார்.
இதேவேளை, புத்தளம் தள வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் முழுமையான அறிக்கை ஒன்றை வழங்குமாறும் புத்தளம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
புத்தளம் தள வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பில் மாகாண ஆளுநருடன் விசேட கலந்துரையாடல். வடமேல் மாகாண சபையின் கீழ் உள்ள புத்தளம் தள வைத்தியசாலையை தரமுயர்த்தல், அபிவிருத்தி செய்தல் மற்றும் அங்கு நீண்ட காலமாக நிலவி வரும் குறைபாடுகள் தொடர்பில் ஆராயும் விஷேட கலந்துரையாடலொன்று நேற்று (29) வடமேல் மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.இந்தக் கலந்துரையாடலில், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அலி சப்ரி ரஹீம், சிந்தக அமல் மாயாதுன்ன , வடமேல் மாகாண முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் பரீத், வைத்தியர் முஹம்மது ஜௌசி, புத்தளம் தள வைத்தியசாலை அபிவிருத்தி குழு உப தலைவர் எஸ்.சந்திரதாச, செயலாளர் ஓய்வு பெற்ற நிர்வாக உத்தியோகத்தர் எச்.எம்.எம்.சபீக், பொருளாளர் பொதுசுகாதார பரிசோதகர் முகம்மது அபுஷாலிப் மற்றும் வைத்தியர் எம்.ஸ்ரீதரன் உட்பட மதத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வைத்தியர்கள், வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினர் புத்தளம் தள வைத்தியசாலை குறைபாடுகள் தொடர்பில் ஆளுநர் நசீர் அஹ்மடிற்கு தெளிவுபடுத்தினார்கள்.கற்பிட்டி, முந்தல், வன்னாத்தவில்லு, புத்தளம் மற்றும் கருவலகஸ்வெவ உள்ளிட்ட பல பிரதேச செயலகத்திற்குற்பட்ட பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான மூவின மக்களும் தமது மருத்துவ தேவைகளை பெற்றுக்கொள்வதற்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கே வருகை தருவதாக இதன்போது ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.மேலும், புத்தளம் நகரை அண்டிய பகுதியில் பொலிஸ் உட்பட முப்படையினரின் முகாம்களும் இருப்பதாகவும் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.இவ்வாறு, நாளொன்றுக்கு பெரும் எண்ணிக்கையிலானோர் தமது மருத்துவ தேவைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு சமூகமளிக்கின்ற போதிலும், அவர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்கான போதுமான வசதிகள் இன்மையால் வைத்தியசாலை நிர்வாகம் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் எடுத்துரைக்கப்பட்டது.மேலும், அபிவிருத்தி உள்ளிட்ட தேவைகளுக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாகாண சபையால் வழங்கப்படுகின்ற நிதி போதுமானதாக இல்லை என இங்கு சுட்டிக்காட்டப்பட்டதுடன், வழங்கப்படும் நிதியை அதிகரித்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் அல்லது புத்தளம் தள வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்குமாறும் ஆளுநரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கும் புத்தளம் தள வைத்தியசாலையில் நோயாளிகள் மாத்திரமன்றி, வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் மற்றும் பயிற்சி வைத்தியர்களும் , ஊழியர்களும் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர் எனவும் தெரிவித்தனர்.அத்துடன், வடமேல் மாகாணத்திற்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள தாங்கள், புத்தளம் தள வைத்தியசாலைக்கு அதிகாரிகளுடன் கள விஜயம் செய்து அங்கு காணப்படும் குறைபாடுகளை ஆராயுமாறும் அந்த குழுவினர் ஆளுநரை வேண்டிக்கொண்டனர்.பாராளுமன்ற உறுப்பினர்கள், வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினர் முன்வைத்த பிரச்சினைகளை மாகாண ஆளுநர் நசீர் அஹ்மட் அமைதியாக செவிமெடுத்தார்.இதன்போது, மாகாணத்தின் சுகாதார தேவைக்காக மத்திய அரசினால் மாகாண சபைக்கு ஒதுக்கப்படுகின்ற நிதி குறைவாக இருக்கிறது. கிடைக்கும் நிதியை மாகாண சபையின் கீழ் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் வழங்க வேண்டும்.கிடைக்கின்ற சொற்ப நிதியைக் கொண்டு அனைத்து வைத்தியசாலைகளுக்கும் பிரித்துக்கொடுப்பது என்பது எமக்கு பெரும் சவாலாக உள்ளது. எனவேதான் மத்திய அரசினால் வழங்கப்படும் நிதியை அதிகரித்துக் கொடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளேன் எனவும் தெரிவித்தார்.அத்துடன், எமது கட்டுப்பாட்டில் உள்ள வைத்தியசாலையை விடுவிப்பது என்பது மாகாணத்திற்கு நஷ்டமாகும். எம்மால் நிர்வாகிக்க முடியாவிட்டால் மாத்திரமே நாம் மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.எனவே, மத்திய அரசினால் நிதி அதிகரித்துக் கொடுக்கப்படும் பட்சத்தில் புத்தளம் தள வைத்தியசாலையின் அபிவிருத்தி உட்பட அங்கு காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.மேலும், அடுத்த மாதம் 12 ஆம் திகதி புத்தளம் மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளதுடன், அந்த கூட்டம் முடிவடைந்த பின்னர் புத்தளம் தள வைத்தியசாலைக்கு கள விஜயம் ஒன்றை மேற்கொள்வதாகவும் ஆளுநர் வாக்குறுதியளித்தார்.இதேவேளை, புத்தளம் தள வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் முழுமையான அறிக்கை ஒன்றை வழங்குமாறும் புத்தளம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.