குவைத் நாட்டின் 64 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு புத்தளம் மதுரங்குளி பிரதேசத்தில் நேற்றையதினம்(11) விஷேட நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
குவைத் நாட்டின் பங்களிப்புடன் மதுரங்குளியில் இயங்கிவரும் மேர்ஸி லங்கா கல்வி வளாகத்தில், மேர்ஸி லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் பௌசுல் ரஹ்மான் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட செயலாளர் எம்.எம்.பீ.ஹேரத் கலந்துகொண்டதுடன், முந்தல் பிரதேச செயலாளர் மற்றும் மதுரங்குளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது அதிதிகள் பேண்ட் வாத்தியங்களுடன் அழைத்து வரப்பட்டதுடன், குவைத் நாட்டின் சுதந்திர தின கேக் அதிதிகளால் வெட்டப்பட்டது.
அத்துடன் புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 335 குடும்பங்களுக்கு சுமார் 15 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகளும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குவைத்தின் 64ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு புத்தளத்தில் விசேட நிகழ்வுகள். குவைத் நாட்டின் 64 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு புத்தளம் மதுரங்குளி பிரதேசத்தில் நேற்றையதினம்(11) விஷேட நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.குவைத் நாட்டின் பங்களிப்புடன் மதுரங்குளியில் இயங்கிவரும் மேர்ஸி லங்கா கல்வி வளாகத்தில், மேர்ஸி லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் பௌசுல் ரஹ்மான் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட செயலாளர் எம்.எம்.பீ.ஹேரத் கலந்துகொண்டதுடன், முந்தல் பிரதேச செயலாளர் மற்றும் மதுரங்குளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.இதன்போது அதிதிகள் பேண்ட் வாத்தியங்களுடன் அழைத்து வரப்பட்டதுடன், குவைத் நாட்டின் சுதந்திர தின கேக் அதிதிகளால் வெட்டப்பட்டது.அத்துடன் புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 335 குடும்பங்களுக்கு சுமார் 15 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகளும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.