• Nov 28 2024

ஐந்து பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை..! வெளியான அறிவிப்பு

Chithra / Jul 7th 2024, 8:21 am
image

 

கதிர்காம விகாரையைச் சுற்றியுள்ள ஐந்து பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  கதிர்காமம் பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுனு மகா கதிர்காம விகாரையின் வருடாந்த அசல பெரஹெர திருவிழாவை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தெடகமுவ கனிஷ்ட வித்தியாலயம், கதிர்காமம் தேசிய பாடசாலை, செல்ல கதிர்காமம் உயர் வித்தியாலயம், சசீந்திர குமார மாதிரி ஆரம்ப பாடசாலை மற்றும் கோதமி கம கனிஷ்ட வித்தியாலயம் ஆகியவை மூடப்படவுள்ளன.

இந்த நிலையில், குறித்த பாடசாலைகளில் பெரஹெர திருவிழாவில் பங்குபற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய குழுக்களை சேர்ந்தவர்கள் தங்க வைக்கப்படவுள்ளனர்.

இதேவேளை, கதிர்காம விகாரையின் ஊர்வலங்கள் முடியும் வரை பாடசாலைகள் மூடப்படும் என்றும் ஆரம்பிக்கப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று (07) முதல் ஜூலை 22 ஆம் திகதி வரை கதிர்காம விகாரையின் பெரஹர நிகழ்வுகள் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்து பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை. வெளியான அறிவிப்பு  கதிர்காம விகாரையைச் சுற்றியுள்ள ஐந்து பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  கதிர்காமம் பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுனு மகா கதிர்காம விகாரையின் வருடாந்த அசல பெரஹெர திருவிழாவை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.இதன்படி, தெடகமுவ கனிஷ்ட வித்தியாலயம், கதிர்காமம் தேசிய பாடசாலை, செல்ல கதிர்காமம் உயர் வித்தியாலயம், சசீந்திர குமார மாதிரி ஆரம்ப பாடசாலை மற்றும் கோதமி கம கனிஷ்ட வித்தியாலயம் ஆகியவை மூடப்படவுள்ளன.இந்த நிலையில், குறித்த பாடசாலைகளில் பெரஹெர திருவிழாவில் பங்குபற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய குழுக்களை சேர்ந்தவர்கள் தங்க வைக்கப்படவுள்ளனர்.இதேவேளை, கதிர்காம விகாரையின் ஊர்வலங்கள் முடியும் வரை பாடசாலைகள் மூடப்படும் என்றும் ஆரம்பிக்கப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, இன்று (07) முதல் ஜூலை 22 ஆம் திகதி வரை கதிர்காம விகாரையின் பெரஹர நிகழ்வுகள் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement