• Jul 03 2025

ஸ்ரீலங்கன் விமான சேவை முறைகேடுகளுக்கு விசேட விசாரணை குழு!

shanuja / Jul 2nd 2025, 3:19 pm
image

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முறைகேடுகளைக் கண்டறிவதற்காக ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுவை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 



2010 – 2025 காலப்பகுதியில் வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமான  நிறுவனம், வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (தனியார்) கம்பனியில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஊழல், மோசடிகள் மற்றும் முறைகேடுகளைக் கண்டறிந்து விபரங்களுடன் கூடிய விதந்துரைகள் அடங்கிய அறிக்கையொன்றை சமர்ப்பிக்க இந்த குழு முன்மொழியப்பட்டது.


அதற்கமைய முன்னாள் கணக்காய்வாளர் தலைமை அதிபதி எச்.எம்.காமினி விஜேசிங்கவின் தலைமையிலான ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 


அத்துடன் விமான நிலைய தொழிற்பாடுகள் தொடர்பாக பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (ஸ்ரீலங்கா), (தனியார்) கம்பனியின் நடவடிக்கைகள்  தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொள்வது தொடர்பாகவும் பரிசீலிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவை முறைகேடுகளுக்கு விசேட விசாரணை குழு ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முறைகேடுகளைக் கண்டறிவதற்காக ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுவை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2010 – 2025 காலப்பகுதியில் வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமான  நிறுவனம், வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (தனியார்) கம்பனியில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஊழல், மோசடிகள் மற்றும் முறைகேடுகளைக் கண்டறிந்து விபரங்களுடன் கூடிய விதந்துரைகள் அடங்கிய அறிக்கையொன்றை சமர்ப்பிக்க இந்த குழு முன்மொழியப்பட்டது.அதற்கமைய முன்னாள் கணக்காய்வாளர் தலைமை அதிபதி எச்.எம்.காமினி விஜேசிங்கவின் தலைமையிலான ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் விமான நிலைய தொழிற்பாடுகள் தொடர்பாக பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (ஸ்ரீலங்கா), (தனியார்) கம்பனியின் நடவடிக்கைகள்  தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொள்வது தொடர்பாகவும் பரிசீலிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement