• May 04 2024

பேஸ்புக் பயன்படுத்துபவர்களுக்கான விசேட அறிவிப்பு..!samugammedia

Sharmi / Jun 2nd 2023, 11:10 am
image

Advertisement

கனடாவில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக ஊடக கணக்குகளை பயன்படுத்துவோருக்கு மெட்டா விசேட அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது.

அதாவது, தற்காலிக அடிப்படையில் இந்த இரண்டு சமூக ஊடகங்களிலும் செய்திகளை முடக்கும் பரீட்சார்த்த முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே கனடாவில் கூகுள் நிறுவனம் இதேபோன்று செய்திகளை முடக்கும் ஓர் பரீட்சார்த்த முயற்சியை இந்த ஆண்டின் ஆரம்பத்தில் மேற்கொண்டிருந்தது.

லிபரல் அரசாங்கத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பில் சி-18 என்னும் சட்டம் காரணமாக இவ்வாறு பரீட்சார்த்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த சட்டத்தின் மூலம் கனடிய உள்ளடக்கங்களை பாதுகாப்பதற்கும் உள்ளடக்கங்களை வழங்குவோருக்கு கொடுப்பனவு ஒன்றை வழங்க வேண்டும் எனவும் சமூக ஊடக நிறுவனங்களிடம் அரசாங்கம் கோரியுள்ளது.

கனடிய அரசாங்கம் குறித்த சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளில் செய்தி பிரசுரிப்பதை முழுமையாக நிரந்தரமாக தடை செய்வதற்கு மெட்டா நிறுவனம் தீர்மானித்துள்ளது.

தெரிவு செய்யப்பட்ட பயனர்கள் இந்த பரீட்சார்த்த முயற்சிக்குள் உள்வாங்கப்பட உள்ளனர்.

சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் உள்ளடக்கங்களுக்கு கட்டணம் ஒன்றை அறவீடு செய்யும் முறை ஒன்றை லிபரல் அரசாங்கம் அறிமுகம் செய்வதற்கு முனைப்பு காட்டி வருகின்றது.

பேஸ்புக் பயன்படுத்துபவர்களுக்கான விசேட அறிவிப்பு.samugammedia கனடாவில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக ஊடக கணக்குகளை பயன்படுத்துவோருக்கு மெட்டா விசேட அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது.அதாவது, தற்காலிக அடிப்படையில் இந்த இரண்டு சமூக ஊடகங்களிலும் செய்திகளை முடக்கும் பரீட்சார்த்த முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஏற்கனவே கனடாவில் கூகுள் நிறுவனம் இதேபோன்று செய்திகளை முடக்கும் ஓர் பரீட்சார்த்த முயற்சியை இந்த ஆண்டின் ஆரம்பத்தில் மேற்கொண்டிருந்தது.லிபரல் அரசாங்கத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பில் சி-18 என்னும் சட்டம் காரணமாக இவ்வாறு பரீட்சார்த்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.இந்த சட்டத்தின் மூலம் கனடிய உள்ளடக்கங்களை பாதுகாப்பதற்கும் உள்ளடக்கங்களை வழங்குவோருக்கு கொடுப்பனவு ஒன்றை வழங்க வேண்டும் எனவும் சமூக ஊடக நிறுவனங்களிடம் அரசாங்கம் கோரியுள்ளது.கனடிய அரசாங்கம் குறித்த சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளில் செய்தி பிரசுரிப்பதை முழுமையாக நிரந்தரமாக தடை செய்வதற்கு மெட்டா நிறுவனம் தீர்மானித்துள்ளது. தெரிவு செய்யப்பட்ட பயனர்கள் இந்த பரீட்சார்த்த முயற்சிக்குள் உள்வாங்கப்பட உள்ளனர். சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் உள்ளடக்கங்களுக்கு கட்டணம் ஒன்றை அறவீடு செய்யும் முறை ஒன்றை லிபரல் அரசாங்கம் அறிமுகம் செய்வதற்கு முனைப்பு காட்டி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement