• Nov 17 2024

ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு

Chithra / Jul 19th 2024, 1:38 pm
image

 

இந்த ஆண்டு 87,000 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு இணையத்தளத்தினூடாக விண்ணப்பித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாணவர்கள் விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தங்களை மேற்கொள்வதற்கு வழங்கப்பட்ட  கால அவகாசம் இன்று வெள்ளிக்கிழமை (19) நள்ளிரவுடன் முடிவடைவதாக  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் சந்தன உடவத்த தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் மாத இறுதிக்குள் பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் பட்டப்படிப்புகளுக்கான வெட்டுப் புள்ளிகளை  அறிவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

74 நாட்கள் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளை அடுத்த சில வாரங்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பேராசிரியர் உடவத்த மேலும் தெரிவித்துள்ளார்.

ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு  இந்த ஆண்டு 87,000 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு இணையத்தளத்தினூடாக விண்ணப்பித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.மாணவர்கள் விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தங்களை மேற்கொள்வதற்கு வழங்கப்பட்ட  கால அவகாசம் இன்று வெள்ளிக்கிழமை (19) நள்ளிரவுடன் முடிவடைவதாக  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் சந்தன உடவத்த தெரிவித்துள்ளார்.ஆகஸ்ட் மாத இறுதிக்குள் பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் பட்டப்படிப்புகளுக்கான வெட்டுப் புள்ளிகளை  அறிவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.74 நாட்கள் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளை அடுத்த சில வாரங்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பேராசிரியர் உடவத்த மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement