• Nov 25 2024

வேட்பாளர்களின் பாதுகாப்பிற்கு விசேட பொலிஸ் பாதுகாப்புப் படையினர்!

Chithra / Aug 12th 2024, 12:29 pm
image

 

ஜனாதிபதி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் 15ஆம் திகதி வியாழக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் விசேட பொலிஸ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்தார்.

அதன்படி, சுமார் 1,500 பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் அந்தப் பகுதியில் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

தேர்தல் அலுவலகத்தின் பாதுகாப்புக்காக, சுற்றுவட்டார கட்டிடங்களில் விமானப்படை மோப்பப் படையினரும் ஈடுபடுத்தப்பட உள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

அன்றைய தினம் தேர்தல் காரியாலயத்தின் பாதுகாப்பிற்காக விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தேர்தல் அலுவலகத்திற்கு வரும் வாகனங்களுக்கு ஏ, பி, சி என மூன்று உரிமங்கள் வழங்கப்பட்டு, அந்த உரிமம் வேட்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது. 

அந்த அனுமதியுடன், வேட்பாளர் மட்டுமே தனது சொந்த வாகனத்தில் தேர்தல் அலுவலகத்திற்கு வர அனுமதிக்கப்படுவார்.

வேட்பு மனுவில் கையொப்பமிடும் மேலும் இருவர் மட்டுமே வேட்பாளருடன் தேர்தல் அலுவலகத்திற்கு வர அனுமதிக்கப்படுவர்.

போக்குவரத்து நெரிசல் காரணமாக தேர்தல் வேட்பாளர்கள் குறித்த நேரத்தில் தேர்தல் அலுவலகத்திற்கு செல்ல முடியாவிட்டால் அவர்களுக்கு உதவுவதற்காக தனி பொலிஸ் மோட்டார் சைக்கிள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வேட்பாளர்களுடன் வரும் ஆதரவாளர்களுக்கு தேர்தல் அலுவலகத்திலிருந்து பல பகுதிகளில் இடம் ஒதுக்கப்படும்.

வேட்பாளர்களின் பாதுகாப்பிற்கு விசேட பொலிஸ் பாதுகாப்புப் படையினர்  ஜனாதிபதி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் 15ஆம் திகதி வியாழக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் விசேட பொலிஸ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்தார்.அதன்படி, சுமார் 1,500 பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் அந்தப் பகுதியில் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.தேர்தல் அலுவலகத்தின் பாதுகாப்புக்காக, சுற்றுவட்டார கட்டிடங்களில் விமானப்படை மோப்பப் படையினரும் ஈடுபடுத்தப்பட உள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.அன்றைய தினம் தேர்தல் காரியாலயத்தின் பாதுகாப்பிற்காக விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.தேர்தல் அலுவலகத்திற்கு வரும் வாகனங்களுக்கு ஏ, பி, சி என மூன்று உரிமங்கள் வழங்கப்பட்டு, அந்த உரிமம் வேட்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த அனுமதியுடன், வேட்பாளர் மட்டுமே தனது சொந்த வாகனத்தில் தேர்தல் அலுவலகத்திற்கு வர அனுமதிக்கப்படுவார்.வேட்பு மனுவில் கையொப்பமிடும் மேலும் இருவர் மட்டுமே வேட்பாளருடன் தேர்தல் அலுவலகத்திற்கு வர அனுமதிக்கப்படுவர்.போக்குவரத்து நெரிசல் காரணமாக தேர்தல் வேட்பாளர்கள் குறித்த நேரத்தில் தேர்தல் அலுவலகத்திற்கு செல்ல முடியாவிட்டால் அவர்களுக்கு உதவுவதற்காக தனி பொலிஸ் மோட்டார் சைக்கிள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.வேட்பாளர்களுடன் வரும் ஆதரவாளர்களுக்கு தேர்தல் அலுவலகத்திலிருந்து பல பகுதிகளில் இடம் ஒதுக்கப்படும்.

Advertisement

Advertisement

Advertisement