• Sep 07 2025

குற்றக்குழு நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்றத்தில் விசேட அறிக்கை

Chithra / Sep 7th 2025, 10:13 am
image

இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட 5 குற்றவாளிகள் தொடர்பாக அரசாங்கம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் விசேட அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் குற்றக்குழு நடவடிக்கைகள் மற்றும் அவ்வப்போது நடைபெறும் துப்பாக்கிச்சூடுகள் குறித்து கேள்விகளை எழுப்ப முடிவு செய்துள்ளன.

நாடு முழுவதும் அவ்வப்போது நடைபெறும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தேசிய பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சாட்டியுள்ளார்.

குற்றக்குழு நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்றத்தில் விசேட அறிக்கை இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட 5 குற்றவாளிகள் தொடர்பாக அரசாங்கம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் விசேட அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனைத் தெரிவித்துள்ளார்.இதற்கிடையில், ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் குற்றக்குழு நடவடிக்கைகள் மற்றும் அவ்வப்போது நடைபெறும் துப்பாக்கிச்சூடுகள் குறித்து கேள்விகளை எழுப்ப முடிவு செய்துள்ளன.நாடு முழுவதும் அவ்வப்போது நடைபெறும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தேசிய பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement