• Dec 24 2024

அனைத்து தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்!

Chithra / Dec 23rd 2024, 12:02 pm
image

 

நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் விசேட அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, பாதுகாப்பு தொடர்பில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பதில் பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு மற்றும் ஒழுங்கைப் பேணுவதற்காக மேல் மாகாணத்தில் மாத்திரம் 6,500 இற்கும் அதிகமான உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாடளாவிய ரீதியிலுள்ள 2000க்கும் மேற்பட்ட தேவாலயங்களில் நத்தார் தினத்தன்று ஆராதனைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்  நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் விசேட அமுல்படுத்தப்படவுள்ளது.அதன்படி, பாதுகாப்பு தொடர்பில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பதில் பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.பாதுகாப்பு மற்றும் ஒழுங்கைப் பேணுவதற்காக மேல் மாகாணத்தில் மாத்திரம் 6,500 இற்கும் அதிகமான உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.மேலும் நாடளாவிய ரீதியிலுள்ள 2000க்கும் மேற்பட்ட தேவாலயங்களில் நத்தார் தினத்தன்று ஆராதனைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement