• Nov 23 2024

இலங்கையில் தீவிரப்படுத்தப்படும் விசேட பாதுகாப்பு திட்டங்கள்..!

Chithra / Jun 19th 2024, 7:42 am
image

 

இவ்வருட பொசன் பண்டிகைக்காக சமய மற்றும் கலாசார நிகழ்வுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட பாதுகாப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி பொசன் பண்டிகை நிகழ்வுகள் நடைபெறும் பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதிலும் சுமார் ஆறாயிரம் பொசோன் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவற்றில் பெரும்பாலான நிகழ்வுகள் மேல் மாகாணத்தில் உள்ள விகாரைகளில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, பொலிஸ் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கென சுமார் 19062 பொலிஸ் உத்தியோகத்தாகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 370 பேரும், முப்படையைச் சேர்ந்த 607 பேரும் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், பொலிஸ் நிலைய மட்டத்தில் விசேட போக்குவரத்துத் திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறும், இரவு பகலாக நடமாடும் மற்றும் மோட்டார் சைக்கிள் ரோந்துகள் மூலம் பிரதேச பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

இலங்கையில் தீவிரப்படுத்தப்படும் விசேட பாதுகாப்பு திட்டங்கள்.  இவ்வருட பொசன் பண்டிகைக்காக சமய மற்றும் கலாசார நிகழ்வுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட பாதுகாப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.இதன்படி பொசன் பண்டிகை நிகழ்வுகள் நடைபெறும் பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.நாடு முழுவதிலும் சுமார் ஆறாயிரம் பொசோன் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவற்றில் பெரும்பாலான நிகழ்வுகள் மேல் மாகாணத்தில் உள்ள விகாரைகளில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, பொலிஸ் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இதற்கென சுமார் 19062 பொலிஸ் உத்தியோகத்தாகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மேலும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 370 பேரும், முப்படையைச் சேர்ந்த 607 பேரும் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.மேலும், பொலிஸ் நிலைய மட்டத்தில் விசேட போக்குவரத்துத் திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறும், இரவு பகலாக நடமாடும் மற்றும் மோட்டார் சைக்கிள் ரோந்துகள் மூலம் பிரதேச பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement