• Jan 30 2025

கொழும்பில் இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம்..!

Sharmi / Jan 29th 2025, 8:52 am
image

இலங்கையின் 77வது சுதந்திர தின நிகழ்வின் ஒத்திகையை முன்னிட்டு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று (29) முதல் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த போக்குவரத்து திட்டம் இன்று (29) முதல் எதிர்வரும் 02 ஆம் திகதி வரையிலும், 04 ஆம் திகதி காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையிலும் அமுலில் இருக்கும் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்படி, மேற்படி தினங்களில் பாடசாலைக்கு செல்லும் சிறுவர்கள் சுதந்திர தின நிகழ்வின் ஒத்திகைக்கு இடையூறு ஏற்படாத வகையில் போக்குவரத்துத் திட்டம் காலை 8.00 மணி முதல் அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, கருவாத்தோட்டம் - விஜேராம மாவத்தையிலிருந்து வித்யா மாவத்தைக்கான நுழைவாயில், பௌத்தாலோக மாவத்தையிலிருந்து மைட்லேண்ட் பிளேஸுக்கான நுழைவாயில், ஸ்டான்லி விஜேசுந்தர மாவத்தையிலிருந்து இலங்கை மன்ற கல்லூரி வீதிக்கான நுழைவாயில் ஆகியன தற்காலிகமாக மூடப்படவுள்ளது. 

அத்துடன் ஒத்திகை காலத்தில் ஹோட்டன் பிளேஸில் இருந்து சுதந்திர சதுக்கம் ஊடான மைட்லேண்ட் பிளேஸுக்கான நுழைவாயில் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம். இலங்கையின் 77வது சுதந்திர தின நிகழ்வின் ஒத்திகையை முன்னிட்டு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று (29) முதல் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.இந்த போக்குவரத்து திட்டம் இன்று (29) முதல் எதிர்வரும் 02 ஆம் திகதி வரையிலும், 04 ஆம் திகதி காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையிலும் அமுலில் இருக்கும் என பொலிஸார் தெரிவித்தனர்.இதன்படி, மேற்படி தினங்களில் பாடசாலைக்கு செல்லும் சிறுவர்கள் சுதந்திர தின நிகழ்வின் ஒத்திகைக்கு இடையூறு ஏற்படாத வகையில் போக்குவரத்துத் திட்டம் காலை 8.00 மணி முதல் அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதன்படி, கருவாத்தோட்டம் - விஜேராம மாவத்தையிலிருந்து வித்யா மாவத்தைக்கான நுழைவாயில், பௌத்தாலோக மாவத்தையிலிருந்து மைட்லேண்ட் பிளேஸுக்கான நுழைவாயில், ஸ்டான்லி விஜேசுந்தர மாவத்தையிலிருந்து இலங்கை மன்ற கல்லூரி வீதிக்கான நுழைவாயில் ஆகியன தற்காலிகமாக மூடப்படவுள்ளது. அத்துடன் ஒத்திகை காலத்தில் ஹோட்டன் பிளேஸில் இருந்து சுதந்திர சதுக்கம் ஊடான மைட்லேண்ட் பிளேஸுக்கான நுழைவாயில் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement