• Jan 30 2025

அநுர அரசுக்கு எதிராக முதலில் போராட்டத்தில் இறங்கும் விவசாயிகள் - எச்சரிக்கும் சங்கம்

Chithra / Jan 29th 2025, 9:04 am
image


தேர்தல் காலத்தில் குறிப்பிட்டதை போன்று நெல்லுக்கான உத்தரவாத விலையை சாதகமான முறையில் நிர்ணயிக்க வேண்டும். முறையற்ற வகையில் செயற்பட்டால் அரசாங்கத்துக்கு எதிராக விவசாயிகள் தான் முதலில் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்  என விவசாய ஒன்றிணைந்த சங்கத்தின் தலைவர் அனுராத தென்னகோன் தெரிவித்தார். 

அநுராதபுரம் பகுதியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பெரும்போக நெற்செய்கை அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், நெல்லுக்கான உத்தரவாத விலை இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை. 

இதனால் ஒரு சில பிரதேசங்களில் ஈர நிலையிலான நெல்லை பிரதான அரிசி உற்பத்தியாளர்கள் 80 மற்றும் 85 ரூபாவுக்கு கொள்வனவு செய்துள்ளார்கள்.

நெல்லுக்கான உத்தரவாத விலையை 140 முதல் 150 ரூபாவாக நிர்ணயிக்குமாறு விவசாயிகள் விவசாயத் துறை அமைச்சிடம் வலியுறுத்தியுள்ள போதும் இதுவரை அதற்கான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை.

'நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயத்தை அரசாங்கம் வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக' விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார். 

அத்துடன் விவசாயிகள் வெற்றிலை போடும் செலவையும் நெல்லுக்கான உத்தரவாத விலையில் சேர்த்துள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

விவசாயிகள் வெற்றிலை போடுவது அரசாங்கத்துக்கு தேவையற்றதொரு விடயமாகும்.

விவசாயிகளை நெருக்கடிக்குள்ளாக்க நினைக்க வேண்டும். 

அவ்வாறு நினைத்தால் கோட்டபய ராஜபக்ஷவுக்கும், அவரது அரசாங்கத்துக்கும் ஏற்பட்ட கதியே இந்த அரசாங்கத்துக்கும் ஏற்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



அநுர அரசுக்கு எதிராக முதலில் போராட்டத்தில் இறங்கும் விவசாயிகள் - எச்சரிக்கும் சங்கம் தேர்தல் காலத்தில் குறிப்பிட்டதை போன்று நெல்லுக்கான உத்தரவாத விலையை சாதகமான முறையில் நிர்ணயிக்க வேண்டும். முறையற்ற வகையில் செயற்பட்டால் அரசாங்கத்துக்கு எதிராக விவசாயிகள் தான் முதலில் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்  என விவசாய ஒன்றிணைந்த சங்கத்தின் தலைவர் அனுராத தென்னகோன் தெரிவித்தார். அநுராதபுரம் பகுதியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.பெரும்போக நெற்செய்கை அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், நெல்லுக்கான உத்தரவாத விலை இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை. இதனால் ஒரு சில பிரதேசங்களில் ஈர நிலையிலான நெல்லை பிரதான அரிசி உற்பத்தியாளர்கள் 80 மற்றும் 85 ரூபாவுக்கு கொள்வனவு செய்துள்ளார்கள்.நெல்லுக்கான உத்தரவாத விலையை 140 முதல் 150 ரூபாவாக நிர்ணயிக்குமாறு விவசாயிகள் விவசாயத் துறை அமைச்சிடம் வலியுறுத்தியுள்ள போதும் இதுவரை அதற்கான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை.'நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயத்தை அரசாங்கம் வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக' விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார். அத்துடன் விவசாயிகள் வெற்றிலை போடும் செலவையும் நெல்லுக்கான உத்தரவாத விலையில் சேர்த்துள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். விவசாயிகள் வெற்றிலை போடுவது அரசாங்கத்துக்கு தேவையற்றதொரு விடயமாகும்.விவசாயிகளை நெருக்கடிக்குள்ளாக்க நினைக்க வேண்டும். அவ்வாறு நினைத்தால் கோட்டபய ராஜபக்ஷவுக்கும், அவரது அரசாங்கத்துக்கும் ஏற்பட்ட கதியே இந்த அரசாங்கத்துக்கும் ஏற்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement